தயிர் நம் தினமும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் அன்றாட பொருள்களில் ஓன்று.
இந்த தயிர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நமது சரும ஆரோக்கியத்திற்கும் ,அழகை பராமரிக்க மிகவும் உதவி செய்கிறது.
தயிரில் ஏராளமான சத்துக்கள் உள்ளதால் இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் சரும பிரச்சனை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மாறும் அந்த வகையில் தயிரைப் பயன்படுத்தி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க அதிகரிக்க செய்வது மற்றும் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என பார்க்கலாம்.
ஒரு பவுலில் தயிர், கடலை மாவு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் அனைத்திலும் ஒரு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அனைத்தையும் ஒன்றாக கலந்து சருமத்தின் மேல் தடவவும் பின்னர் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவுவோம்.
அரை கப் தயிர் எடுத்துக் கொண்டு அவற்றில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் தடவினால் உடல் உஷ்ணத்தால் வறட்சி அடைந்த சருமம் மிகவும் பொலிவுடன் காணப்படும்.
ஒரு துண்டு வெள்ளரிக்காயை, 2 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் அல்லது கடலைமாவு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து ஒருமுறை அரைத்து பின் சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.