29.3 C
Chennai
Monday, Sep 30, 2024
14 1473828762 aloevera
முகப் பராமரிப்பு

முகத்தில் வளரும் முடியை அகற்ற இந்த பொருளை தினமும் உபயோகிங்க!!

எண்ணெய் சருமத்தை விட வறண்ட சருமத்தில் எளிதில் சுருக்கங்கள், அலர்ஜி ஏற்பட்டு விடும். அதுவும் குளிர்காலத்தில் தினமும் பராமரிக்காவிட்டால் சுருக்கங்கள் வந்து முகத்தில் எளிதில் முதிர்ச்சியை அளித்து விடும்.

தினமும் ஏதாவது எண்ணெய் பயன்படுத்தியே குளிக்க வேண்டும். அதோடு மாய்ஸ்ரைஸர் பயன்படித்துங்கள். இதனால் வறட்சியை சமாளிக்கலாம். அது தவிர குளிர் மற்றும் மழை காலத்தில் முகம் பொலிவேயில்லாமல் களையிழந்து இருக்கும். இதனை தவிர்க்க இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்.

சோற்றுக் கற்றாழை : சோற்றுக் கற்றாழையை விட உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒரு பொருள் ஏதுமில்லை. அட்டகாசமான அழகினை மிளிரச் செய்யும். உங்கள் சருமம் எப்படியாத இருந்தாலும் சரி, அதனை பாதிப்புகளிலிருந்து மீட்டு மிளிரும் அழகினை தருவது சோற்றுக் கற்றாழை மட்டுமே. சோற்றுக் கற்றாழையுடன் சேர்க்கும் மற்ற மூலிகைகள் ஈடில்லா அழகினை தரும். அவ்வாறான மூன்று குறிப்புகள் இங்கே உங்களுக்காக. உபயோகித்து பயன் பெறுங்கள்

வறட்சியினால் உண்டாகும் சிவந்த தடிப்பை தடுக்க : சரும வறட்சியினால் சருமம் எரிச்சலடைந்து சிவந்து தடித்துவிடும். இதற்கு சோற்றுக் கற்றாழையுடன் சிறிது யோகார்ட் அல்லது தயிர் சம அளவு கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கல் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் மேலும் வறட்சி அடையும். இதனால் வெதுவெதுப்பான நீரையே உபயோகியுங்கள்.

களையான முகம் கிடைக்க : வறட்சியினால் உண்டாகும் பொலிவின்மையை தடுக்க மஞ்சள் உபயோகிக்கலாம். மஞ்சளை தனியாக உபயோகித்தால் சருமம் மேலும் வறட்சி அடையும். எனவே கற்றாழையின் சதைப் பகுதியுடன், ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனால் முகம் மிக மிருதுவாகி மிளிரும்.

தேவையற்ற முடியை அகற்ற கிடைக்க : பப்பாளியை தினமும் உபயோகித்தால் முகத்தில் தேவையற்ற முடி வளராது. பப்பாளியிலுள்ள பெப்பெய்ன் என்ற என்சைம் முகத்தில் வளரும் முடியை உடைக்கும் ஆற்றலை கொண்டது. பப்பாளி ஒரு துண்டை எடுத்து 2 டீஸ்பூன் கற்றாழை சதைப் பகுதியுடன் கலந்து முகத்தில் தினமும் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். தினமும் செய்து வந்தால் முகம் மிருதுவாகவும் பூனை முடிகளற்றும் காணப்படும்

14 1473828762 aloevera

Related posts

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் சில இயற்கை வழிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…மீசை போல் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க அருமையான வழிகள்!!!

nathan

கண்களில் கருவளையம் மறைய…

nathan

முகம் கழுவும் போது செய்ய வேண்டியவை

nathan

முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும் சமையலறைப் பொருட்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா அரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…புருவங்ளை பராமரிக்க எளிய வழிகள்

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ் (beauty tips in Tamil)

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் மூக்குத்தியை இடப்பக்கம் அணிவதின் அறிவியல் உண்மை !!

nathan