ஆலிவ் எண்ணெய் ஆலிவ் எண்ணெயைத் தடவுவதன் மூலம் தழும்புகளை குறைத்திட முடியும். ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவிக் கொண்ட பின்னர், மிதமான நீராவியில் முகத்தைக் காட்டுங்கள். இதன் மூலம் துளைகள் சுத்தமாகி, தழும்புகளின் அடர்த்தி குறைந்து விடுகிறது.
சந்தனம் சந்தனத்தை அரைத்து தடவிக் கொள்வதன் மூலம் தழும்புகளை மிதமாக்கி வி முடியும். சந்தனப் பொடியை, ரோஸ் வாட்டர் அல்லது பாலுடன் கலக்கவும். உங்களுடைய முகத்திலுள்ள தழும்பிளல் இந்த கலவையை தடவி விட்டு, 1 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக அலசி கழுவி விடவும்.
பாதாம் பால் அல்லது தண்ணீரில் பாதாமை 12 மணிநேரம் ஊற வைக்கவும். பாதாம் கொட்டையின் தோலை உரித்து விட்டு, நன்றாக அரைக்கவும். இந்த கலவையுடன் ரோஸ் வாட்டரைக் கலந்து, தழும்புகளில் தடவிக் கொள்ளுங்கள்.
எலுமிச்சை சாறு ஒரு நாளைக்கு 3 முறை வீதம் எலுமிச்சை சாற்றை இரண்டு வாரங்களுக்கு குடிப்பதன் மூலமும் தழும்புகளை மறையச் செய்ய முடியும்.
சமையல் சோடா சமையல் சோடாவைக் கொண்டு உங்களுடைய முகத்தில் தேய்த்து விடுவதன் மூலம் முகத்தின் தழும்பை குறையச் செய்ய முடியும். சமையல் சோடாவுடன், தண்ணீரைக் கலந்து 1 முதல் 2 நிமிடங்களுக்கு தேய்த்து விடவும். பின்னர் மிதவெப்பமான தண்ணீரில் கழுவி விடுங்கள். இதை தொடர்ந்த செய்து வரவும்.