அவகாடோவில் அதிக அமினோ அமிலங்கள் இருக்கின்றன. அவை சருமத்தில் ஈரப்பதம் அளிக்கின்றன. சுருக்கங்களை போக்கும். இளமையான சருமத்தை தரும். முக்கியமான சென்ஸிடிவ் சருமத்திற்கு ஆரோக்கியமானது.
அவரவர் சருமத்திற்கு தகுந்தாற்போல் அவகாடோவை எப்படி உபயோகப்படுத்தலாம்.
வறண்ட சருமத்திற்கு : அவகாடோ மசித்தது – 2 ஸ்பூன் தேன் – 2 ஸ்பூன் மாம்பழம் – 2 ஸ்பூன் மேலே சொன்னவற்றை ஒன்றாக கலந்து முஅக்த்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால் உடனடியாக முகம் பளபளப்பதை பார்ப்பீர்கள்.
சாதரண சருமம் : யோகார்ட் – அரை கப் அவகாடோ – கால் கப் தேன் – கலக்க தேவையான அளவு அவகாடோவை நன்றாக மசித்து எல்லாவ்ற்றையும் கலந்து முகத்தில் போடவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
எண்ணெய் சருமத்திற்கு : தேவையானவை : அவகாடோ – 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1ஸ்பூன் கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன் இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.