வெந்தயம் தலைமுடிக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல அற்புதங்களை தருகிறது. அது சுருக்கம், கருமை, முகபப்ரு என பலப் பிரச்சனைகளை குணமாக்குகிறது, முகச் சுருக்கத்தையும் போக்கும்.
முகத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால் வெந்தயத்தை உபயோகப்படுத்தும்போது தேவையான ஈரப்பதம் பெற்று முகம் பளபளக்கும். அதனை பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.
வெந்தய க்ளின்சர் :
வெந்தயத்தை பாலில் ஊற வைத்து அதனை அரைத்து முகத்தில் பேஸ்ட் போல் போடுங்கள். சில நிமிடங்கள் மசாஜ் செய்து பின் 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் சுத்தமாக இருக்கும்.
வெந்தய ஸ்க்ரப் :
அதிக எண்ணெய் பசை இருப்பவர்களுக்கான குறிப்பு இது. வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு தேன் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். இதனால் அதிக எண்ணெய் முகத்தில் வழிவது தவிர்க்கப்படும்.
வெந்தய ப்ளீச் :
வெயிலில் சென்று முகம் கருமையடைந்திருந்தால் அதற்கு இந்த குறிப்பு உதவும்.
வெந்தயத்தை அரை கப் அளவு எடுத்து நீரில் போட்டு கொதிக்க விடுங்கள். அதனை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.
மறு நாள் அந்த நீரைக் கொண்டு முகம், கழுத்து கை என கருமை படியும் இடங்களில் எல்லாம் கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள கருமை மறைந்து பிரகாசிக்கும்.
வெந்தய டோனர் :
வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் யோகார்ட் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளுங்கள். முகத்தை கழுவிய பின் இந்த கலவையை முகத்தில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மெருகேறும்.