தேவையான பொருள்கள் :
கடலைமாவு -1 கப்
மஞ்சள்தூள் -சிறிது
ஓமம்-அரை டீ ஸ்பூன்
சமையல் சோடா -கால் ஸ்பூன்
பஜ்ஜி மிளகாய்-6
உப்பு -சுவைக்கு
எண்ணை -பொரிக்க
அலங்கரிக்க :
பெரிய வெங்காயம் -1
ஓம பொடி or மிக்சர் சிறிது
லெமன் ஜூஸ் சிறிது
மல்லி தலை சிறிது
செய்முறை :
கடலைமாவு, மஞ்சள்தூள், ஓமம், சமையல் சோடா, உப்பு ,1 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கொஞ்சம் திக் ஆக கரைத்து கொள்ளவும்.மாவு மற்ற பஜ்ஜிக்கு போல் தளர்வாய் இருந்தால் மிளகாயில் மாவு ஓட்டுவது கடினம்.அதனால் திக் ஆக இட்லி மாவு போல் கலந்து வைத்து கொள்ளவும்.கலந்த பின் ஒரு 1 0 நிமிடம் வைக்கவும்.
பின் மிளகாயை கழுவி படத்தில் காட்டிய படி ஒரு புறம் கீறி விதை நீக்கி வைத்து கொள்ளவும்.
பின் நம் வலது கை நடுவிரலை காம்புக்கு கீழ் உள்ள பகுதியில் உள்ளே விட்டு அழுத்தினால் கீறிய பகுதி விரிந்து வரும்.அப்படியே மாவில் முக்கி நிமிர்த்து பிடித்தால் எக்ஸ்ட்ரா மாவு வடித்து விடும் .எல்லா பகுதியிலும் சமமாக மாவு ஒட்டி இருக்கும் .இதை கண் இமைக்கும் நேரதில் விரைவாக செய்து எண்ணையில் கீறிய பக்கம் மேல் இருக்கும் படி போட வேண்டும். அடிப்புறம் வெந்த உடன் திருப்பி போட்டு நன்றாக வெந்த பின் எடுக்கவும்.
அனைத்து பஜ்ஜி செய்த பின் கீறிய பகுதியில் லெமன் ஜூஸ்,உப்பு கலந்த பொடியாக நறுக்கிய வெங்காயம் வைத்து அடைத்து மேல் மல்லி தலை ,ஓம பொடி தூவி தரவும்.
மற்றாரு முறை :
கீறிய பகுதியில் ,கெட்டியான புளி சட்னி உடன் வறுத்த சென்னா டால் பவுடர்,or நம் இட்லி பொடி வைத்து stuff செய்து பொரிக்கலாம்.
Cut mirchi pakoda :
பஜ்ஜி பொரித்து எடுத்த பின் அதை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து மீண்டும் டபுள் fry செய்தால் மிகவும் சுவையாக மெருமெரு என்றும் ருசியாக இருக்கும்.எனக்கு இப்படி செய்வது மிகவும் பிடிக்கும்.
இந்த கட் மிர்ச்சி pakoda வை சாதாரண பஜ்ஜியை கட் செய்தும் செய்யலாம்.or stuff செய்த பஜ்ஜி செய்தும் செய்யலாம்.பின் வெங்காயம் ஓம பொடி மல்லி தலை ,லெமன் ஜூஸ் தூவி பரிமாறவும்
மிர்ச்சி பஜ்ஜி chat :
Cut mirchi pakoda செய்து அதில் இனிப்பு புளிப்பு சட்னி , சிறிது டொமாடோ sauce சிறிது ,தயிர் சிறிது ,onion சிறிது,ஓம பொடி,லெமன் ஜூஸ்,மல்லி தலை போட்டு chat போல பரிமாறலாம்.