மஞ்சள் சோள மாவு – 1 கப்,
வறுத்து அரைத்த வேர்க்கடலை மாவு – 1/2 கப்,
பொட்டுக்கடலை மாவு – 1/2 கப்,
அரிசி மாவு – 1/2 கப்,
வெள்ளை எள் – 1/2 டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிது,
சீரகம் – சிறிது (விருப்பப்பட்டால்) உப்பு,
எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
எண்ணெய், நெய் தவிர மற்ற எல்லா மாவுகளையும் ஒன்றாகக் கலக்கவும் (சோள மாவை மட்டும் லேசாக வறுத்து சேர்க்கவும்). பின் இந்த கலவையில் நெய்யை சூடாக்கி சேர்த்து, எள், சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். மாவை கொஞ்சம், கொஞ்சமாக முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுத்து உடையாமல் டப்பாவில் அடுக்கி வைத்துக் கொள்ளவும்.