பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மைதா ஸ்வீட் சிப்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மாலை நேர ஸ்நாக்ஸ் மைதா ஸ்வீட் சிப்ஸ்
தேவையான பொருட்கள் :
மைதா மாவு – ஒரு கப்,
பொடித்த சர்க்கரை – அரை கப்,
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,
ஆரஞ்சு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.
செய்முறை :
* மைதா மாவுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, ஃபுட்கலர் சேர்த்து, நீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, சப்பாத்தியாகத் தேய்க்கவும்.
* தேய்த்த மாவில் சிறிய மூடிகளால் ‘கட்’ செய்து, (வேண்டிய வடிவில்) கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெட்டி வைத்ததை போட்டு பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான மைதா ஸ்வீட் சிப்ஸ் ரெடி.
* குறிப்பு : மாவை சப்பாத்தி போல் செய்து கத்தியால் கட்டங்களாக வெட்டியும் செய்யலாம்.