மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த தயிர் சேமியாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மாலை நேர சிற்றுண்டி தயிர் சேமியா
தேவையான பொருட்கள் :
சேமியா – அரை கப்,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
பால் – அரை கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
பச்சை மிளகாய் – 1,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கேரட் – 1,
முந்திரிப்பருப்பு – 5,
உலர் திராட்சை – 10,
இஞ்சி – சிறிய துண்டு.
செய்முறை :
* கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
* கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தயிர், பால், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
* சேமியாவை தண்ணீர் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்தெடுக்கவும். பின் நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் 2 அல்லது 3 முறை அலசி நீரை நன்றாக வடித்து விடவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை இரண்டையும் சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.
* அடுத்து அதே வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்த பின் துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் சேமியாவில் சேர்க்கவும்.
* சேமியாவை நன்றாக கிளறிய பின்னர் அதில் கடைந்து வைத்துள்ள தயிரை சேர்த்த பின் அடுப்பை அணைக்கவும்
* கடைசியாக கொத்தமல்லித்தழை, துருவிய கேரட், முந்திரி, உலர்திராட்சை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
* சூப்பரான தயிர் சேமியா ரெடி.
* இதை குளிரவைத்து வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். (சற்று கெட்டியாக இருந்தால் மேலும் சற்று புளிப்பில்லாத தயிரைக் கடைந்துவிட்டு அதில் சேர்த்து பரிமாறலாம்).