இந்த குளிர்காலத்திற்கு மாலையில் சூடாக சாப்பிட மிளகு போண்டா சூப்பராக இருக்கும். இந்த மிளகு போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மாலைநேர ஸ்நாக்ஸ் மிளகு போண்டா
தேவையான பொருட்கள் :
உளுந்து ஒரு – கப்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
மிளகு – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று,
பல்லு பல்லாக கீறிய தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை :
* மிளகை ஒன்றும் கொரகொரப்பாக உடைத்து கொள்ளவும்.
* உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து மிக்சியில் போட்டு உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, நைஸாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கீறிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
* அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டு போட்டு வெந்ததும் போண்டாக்களாகப் பொரித்து எடுக்கவும்.
* மாலைநேர ஸ்நாக்ஸ் மிளகு போண்டா ரெடி.
குறிப்பு :
* மிளகை தூள் செய்தும் போடலாம். முழு மிளகையும் போடலாம். உளுந்து அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.