30.8 C
Chennai
Saturday, Oct 5, 2024
PGjLaMJ
சூப் வகைகள்

மான்ச்சூ சூப்

என்னென்ன தேவை?

வெண்ணெய் அல்லது எண்ணெய் – 2 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 1/4 கப்,
கோஸ் – 1/4 கப்,
பீன்ஸ் -1/4 கப்,
கேரட் – 1/4 கப் ( காய்கள் அனைத்தும் பொடியாக நறுக்கியது),
துருவிய நூல்கோல் – 1/2 கப்,
பேபிகார்ன் – 1/4 கப்,
பீர்க்கங்காய் – 2 கப் (பொடியாக நறுக்கியது),
வெங்காயத்தாள் – 1 கப் (நறுக்கியது).

சேர்த்துக் கலக்க…

தண்ணீர் – 2 கப்,
சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்,
சோயா சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
வினிகர் – 1/4 கப்,
உப்பு – தேவையான அளவு,
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் (அல்லது சிவப்பு மிளகாய் விழுதையும் சேர்க்கலாம்).

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சுட வைத்து காய்கறிகளை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பின் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு காய்கறிகள் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்தவுடன் இறக்கி வைத்து நறுக்கிய வெங்காயத்தாளுடன் பரிமாறவும்.PGjLaMJ

Related posts

டோம் யும் சூப்

nathan

சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் சூப்

nathan

தால் சூப்

nathan

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

nathan

கேழ்வரகு வெஜிடபிள் சூப்

nathan

பசியை தூண்டும் மூலிகை சூப்

nathan

பரங்கிக்காய் சூப்

nathan

சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்

nathan