என்னென்ன தேவை?
மாங்காய் – 1 (துருவிக் கொள்ளவும்),
பச்சை மிளகாய் – 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்),
உளுத்தம் பருப்பு – 100 கிராம்,
கடலைப் பருப்பு – 100 கிராம்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பருப்புகளை நீரில் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் துருவிய மாங்காய், மிளகாய் விழுது, சோம்பு, உப்பு, அரிந்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்த மாவை வடையாக தட்டி பொன்னிறமாக இருபுறமும் திருப்பிப் போட்டு பொரித்தெடுக்கவும். எண்ணெய் நன்றாக சூடாகாவிட்டால் வடை எண்ணெய் குடிக்கும். இந்த வடை புளிப்பு சுவையுடன் டேஸ்ட்டாக இருக்கும். மாங்காயில் வைட்டமின் ஏ, நார்ச்சத்து உள்ளன. பசியை தூண்டக்கூடியது. உடலுக்கு சூடு என மாங்காயை பலர் சாப்பிடுவதில்லை. எதையுமே அளவோடு சாப்பிட்டால் அதனதன் வைட்டமின் சத்துகள் நமக்குக் கிடைக்கும்.