தேவையான பொருட்கள்:
காளான் – 2 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
வெங்காயம் – 2
மிளகாய் – 5
மிளகு – தே. அளவு
தனியா – தே. அளவு
இலவங்கப்பட்டை – தே. அளவு
இலவங்கம் – தே. அளவு
மஞ்சள் தூள் – தே. அளவு
பூண்டு – தே. அளவு
கொத்துமல்லி – தே. அளவு
செய்முறை:
முதலில் காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த காளானை நன்றாக கலக்க வேண்டும். வெங்காயத்தையும், தேங்காய் விழுதையும் சேர்க்கவும். பிறகு 5 நிமிடம் சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதன் மேல் கொத்தமல்லி தூவி, சப்பாத்தி, பிரெட், சாதம் ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.