ரெட் லிப்ஸ்டிக் உங்களுக்கு நாள் முழுவதும் மற்றும் இரவு நேரத்திலும் மிகவும் அழகாக இருக்கும். இந்த ஒரு லிப்ஸ்டிக் மட்டுமே போதுமானது என்று சொல்லும் அளவிற்கு முழுவதுமான அழகான பார்வையை வீசச் செய்து விடும். உலகம் முழுவதும் உள்ள பெண்களிடையே இப்போ இது தான் ட்ரெண்ட்.
ஸ்மோக்கி ஐஸ் எடுத்துக் கொண்டால் மஸ்காரா கண்டுபிடிப்பதற்கு முன்னால் அந்த காலத்து பெண்களால் கோள் லுக் (kohl eyed look) மிகவும் பயன்படுத்தப்பட்டு விரும்பப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது.
நிறைய பெண்கள் தங்களுடைய பியூட்டி காஸ்மெட்டிக்ஸ்யை எப்பொழுது வெளியே சென்றாலும் கொண்டு செல்வர். ஆனால் விஷயம் என்னவென்றால் உங்கள் கண்கள் மற்றும் உதட்டிற்கு அடர்ந்த நிற வர்ணங்கள் தேவைப்படுகிறது.
இந்த ஸ்டைல் உங்களுக்கு கிளாசிக் லுக்கை கொடுத்து உங்களை ஒரு ஹீரோயினாக மாற்றி விடும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை.
இதை செய்வது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல. இதற்கு உங்கள் புத்தி கூர்மை, மேக்கப் பொருட்கள் மற்றும் கவனம் தேவை.
பகல் நேர பார்வையில் ரெட் லிப்ஸ் மற்றும் ஸ்மோக்கி ஐஸ்
இந்த மேக்கப் உங்கள் பகல் நேரத்திற்கும் மிக பொருத்தமாக இருக்கும். உங்கள் முகழகு அன்று மலர்ந்த பூக்கள் போன்றும் சாதாரணமாக நீங்கள் இருப்பதை விட 100 மடங்கு அழகாக காட்சியளிப்பீர்கள். உங்களுக்கு நிறைய பேர்களின் கவனத்தையும் ஈர்த்து அழகான புன்னகை, ரெம்ப அழகான வசீகரிக்கும் கண்கள் என்ற பாராட்டு மழையையும் பொழிய வைக்கும்.
உங்களுக்கு அழகான சருமம் இல்லை என்றால் பரவாயில்லை. கொஞ்சம் பவுண்டேஷன் போட்டு கண்சீலர் மூலம் உங்கள் நிறம், புன்னகை வளைவு, சுருக்கங்கள், திறந்த சரும துவாரங்கள், கருமை பாதங்கள் போன்றவற்றை கவர் செய்ய வேண்டும். அதிகமான பவுண்டேஷன் பண்ணாமல் லேசான மெதுவான பவுண்டேஷன் போதுமானது.
காண்டூர் செய்யும் போது முகம், கன்னங்கள், தடைகள் மற்றும் ஹேர் லைன் வரை பரப்பி முடிக்க வேண்டும். காண்டூர் செய்யும் போது பிரஷ் பயன்படுத்திக் கொள்ளவும்.
லேசான ப்ளஷ்சரை கன்னத்தில் தடவி பரப்ப வேண்டும். இப்பொழுது மஸ்காராவை மேல் இமைகளில் மட்டும் அப்ளே பண்ணி கீழ் இமைகளை அப்படியே விட்டு விட வேண்டும்.
கோளை (kohl) நோக்கி சரிவான முறையில் ஐ லைனரை உங்கள் கண்ணுக்குள் இருக்கும் வாட்டர் லைனில் அப்ளே பண்ணி மஸ்காராவை மேல் இமைகளில் அப்ளே பண்ண வேண்டும்.
பிறகு உங்களுக்கு பொருத்தமான ரெட் லிப்ஸ்டிக்கை எடுத்து லிப் லைனர் இல்லாமலோ அல்லது பயன்படுத்தியோ உதட்டில் அப்ளே பண்ணி கண்ணாடியில் பார்த்தால் நீங்கள் அழகாக மாறியிருப்பதை பார்த்து நீங்களே ரசித்து கொள்வீர்கள்.
இந்த மேக்கப் லுக் உங்களது டே டைம் மற்றும் ஆபிஸ் டைம்க்கு சிறந்தது. இதை ஈஸியாக நைட் லுக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
இரவு நேர பார்வையில் கவர்ச்சிகரமான ரெட் லிப்ஸ் மற்றும் ஸ்மோக்கி ஐஸ்
இந்த லுக் அந்த காலத்து திவாஸ் மாதிரியான தோற்றத்தை தருகிறது.
இதற்கும் லேசான பவுண்டேஷன் மற்றும் கண்சீலர் பயன்படுத்தி சரும கோடுகள் போன்றவற்றை மறைத்து கொள்ளுங்கள். காண்டூர் பயன்படுத்தி முகத்தை சரியாக்குங்கள். நல்ல அடர்ந்த ஷேடிங் காண்டூர் பயன்படுத்தி கன்னங்கள்,
தடைகள், ஹேர் லைன் போன்றவற்றை சரி பண்ணுங்கள். ஸ்சைனி ப்ளஷ்சரை எடுத்து பிரஷ்யை கொண்டு திறந்த துவாரங்கள் மற்றும் கன்னத்திற்கு சற்று மேலாக அப்ளே பண்ணால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
நைட் டைம் கண்களுக்கு விங்க்டு ஐ லைனர் (winged eye liner ) பொருத்தமாக இருக்கும். பிளாக் லிக்யூடு ஐ லைனர் எடுத்து உங்கள் கண்களில் உள்ளே உள்ள மேல் மற்றும் கீழ் வாட்டர் லைனில் வரைய வேண்டும்.
பிறகு கண்களுக்கு வெளியே மேல் இமைக்கு மேல் வரைய வேண்டும். நீல நிறம் கலந்த அல்லது கருப்பு கலந்த மெட்டாலிக் ஷேட்ஸ் (metallic shades) ட்ராமா (drama) பயன்படுத்த வேண்டும்.
ஒரு சிறிய முக்கோண வடிவத்தில் கண்களுக்கு வெளியே ஐ லைனர் வைத்து வரைந்து காது வரை செல்ல வேண்டும். காது வரை இரண்டு விங்க்ஸ் வரைய வேண்டும். இது சின்னதாக சரிசமமாக இருப்பது மிகவும் முக்கியம். ஐ லேசஸை மஸ்காரா மூலம் சுருட்டி இரண்டு தடவை ட்ராமா அப்ளே பண்ண வேண்டும்.
சின்ன க்ளிட்டர் டெக்கரேஷன் பயன்படுத்தி கண்களுக்கு கீழே வைக்க வேண்டும். இது உங்கள் ட்ராமா லுக்கை எடுத்துக் காட்டும். பிறகு அடர்ந்த ரெட் லிப்ஸ்டிக்கை லிப் லைனர் கொண்டோ அல்லது இல்லாமலோ அப்ளே பண்ணி கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் முகம் அந்த இரவுப் பொழுதிலும் ஜொலி ஜொலிக்கும்.