நமது மனித உடலும் ஓர் கணினியைப் போன்றது தான். உண்மையில், மனித உடலின் பிரதிபலிப்பு தான் கணினி என்றே கூறலாம். கணினியில் எப்படி ஸ்டோரேஜ் எனக் கூறப்படும் சேமிப்புப் பகுதியோ, அவ்வாறு தான் நமது மனித உடலுக்கு மூளை. இவையின்றி ஓர் அணுவையும் அசைக்க முடியாது.
நமது மூளையில் நினைவுகள் சேமிப்பு ஆகும் முறை, அதன் செயல்பாடு, எங்கோ, எப்போதோ, சிறுவயதில் கண்ட ஓர் நபரின் முகத்தை ஞாபகம் வைத்திருக்கும் அதே மூளை, ஏன் போன வாரம் நீங்கள் சாப்பிட்ட காலை உணவு என்ன என்பதை மறந்துவிடுகிறது?
எது வேண்டும், எது வேண்டாம் என்ற பகுத்தறிவுத் திறன் கொண்டது மூளை. இனி, மனித மூளையைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்துப் பார்க்கலாம்…
புதிய இணைப்பு
உங்களது மூளையில் ஒவ்வொரு முறையும் நினைவுகள் சேமிப்பாகும் போது, ஓர் புதிய இணைப்பு உருவாகிறது. அது ஏற்படாவிட்டால் அந்த நினைவு சேமிப்பாகாது. இம்முறையில் ஏதேனும் குறைபாடு ஏற்படுவதால் தான் ஞாபக மறதி போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.
ஆக்ஸிஜன்
உங்கள் உடலில் இருக்கும் மொத்த ஆக்ஸிஜனில், 20%த்தை மூளையே எடுத்துக்கொள்கிறது. இது இரத்தத்திற்கும் பொருந்தும்.
மின்சார உற்பத்தி
அதிகாலை நீங்கள் எழும் போது, உங்கள் மூளையில் இருந்து தயாராகும் மின்சாரத்தை வைத்து ஓர் விளக்கை எரியவைக்க முடியும்.
ருசியை கண்டறியும் திறன்
நாக்கு மட்டுமில்லாது, வயிறு, குடல், கணையம், நுரையீரல், ஆசனவாய், விதைப்பை மற்றும் மூளையிலும் கூட ருசியைக் கண்டறியும் திறன் இருக்கிறதாம்.
ஐன்ஸ்டீனின் மூளை
ஓர் நோயியல் மருத்துவர், ஐன்ஸ்டீனின் மூளையைத் திருடி, 20 வருடங்களாக ஓர் கண்ணாடி ஜாடியில் வைத்திருந்தாராம்.
கொழுப்பு
நமது மூலையில் 60% அளவு வெறும் கொழுப்பு தான் இருக்கிறது.
சாக்லேட்
சாக்லேட்டின் சுவை / மனமானது மூளையின் ஆற்றல் அலைகளை அதிகரித்து தளர்வடைய / இலகுவாக உணரச் செய்கிறதாம்.
மறப்பது நல்லது
சில தேவையற்ற விஷயங்களை அல்லது நினைவுகளை மறப்பது நல்லது தான். ஏனெனில், தேவையற்ற நினைவுகள் அழியும் போது, மூளையின் நரம்பு மண்டல செயல்பாடு அதிகரிக்குமாம்.
ஆல்கஹால்
நீங்கள் ஆல்கஹால் உட்கொள்ளும் போது நடந்ததை மறப்பது கிடையாது, உண்மையில் நினைவுகளை உருவாக்கும் செயல்பாடு தடைப்பட்டு போகிறது, ஆகையால் நினைவுகள் சேமிக்கப் படுவதேயில்லை. அதனால் தான் அதிகமாக குடிப்பவர்களுக்கு, அந்த சமயத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் இருப்பதற்கு காரணம்.
இடது, வலது
உண்மையில், இடது மூளை, வலது மூளை என்று எந்த பிரிவினையும் இல்லையாம். மூளை இனைந்து ஒரே மாதிரி தான் செயல்படுமாம்.
மொபைல் பயன்பாடும்
அதிகமாக மொபைல் பயன்படுத்தி வந்தால், மூளையில் கட்டிகள் உறவாக வாய்ப்புகள் இருக்கின்றதாம்.
ஆறு நிமிடங்கள்
ஆல்கஹால் உட்கொண்ட ஆறு நிமிடங்களில் உங்கள் மூளையின் செயல்திறனில் மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறது.
மூளையின் உருவ மாற்றம்
ங்கள் புதியதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது, உங்கள் மூளையின் உருவத்தில் மாற்றம் ஏற்படுமாம்.