என்னென்ன தேவை?
எண்ணெய் – தேவைக்கு,
மட்டர் (பச்சைப் பட்டாணி) – 1 டம்ளர்,
இஞ்சி – 2 இஞ்ச் துண்டு,
பச்சை மிளகாய் – 1,
வெங்காயம் – 1,
பூண்டு – 3 பல்,
பட்டை – 1 சிறிய துண்டு,
கிராம்பு – 1,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கறிவேப்பிலை – சிறிது.
எப்படிச் செய்வது?
பட்டாணியை 1 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடிக்கவும். அதில் மூன்றில் ஒரு பாகத்தை எடுத்து அத்துடன் கிராம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்து நன்கு அரைக்கவும். இப்போது மீதி உள்ள பட்டாணியை மிக்ஸியில் போட்டு, மிக்ஸியை ஓடவிடாமல் வைப்பரில் இரண்டு முறை திருப்பி எடுத்தால் ஒன்றும் பாதியுமாக இருக்கும். அரைத்த மாவில் இதையும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையையும் அரிந்து சேர்த்து, உப்பு சேர்த்து, நன்கு பிசைந்து ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து எண்ணெயில் வடைகளாகப் பொரித்து எடுக்கவும்.