என்னென்ன தேவை?
மீன் – 8 துண்டுகள
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 8
கருவேப்பிலை – 4 கொத்து
மல்லிதழை – 2 அல்லது 4 கொத்து
எலுமிச்சம்பழசாறு – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மைதா – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
எப்படிச் செய்வது?
வெங்காயம், கருவேப்பிலை, மல்லிதழை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழசாறு ,மிளகாய்த்தூள்,சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, அரைத்த மசாலா சேர்த்து திக்கான மசாலா செய்து கொள்ளவும். மீன் துண்டின் இரு புறங்களிலும் மசாலா கலவையை தடவி விடவும். அதன் மேலே மைதா மாவை தூவி 1 மணி மேரம் வரை ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் , மிதமான சூட்டில் மீனை இரு புறமும் பொரித்தெடுக்கவும்.