தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2கப்
புதினா – அரைகப்
கொத்தமல்லி – அரைகப்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரக பொடி – 1ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லி இலை,புதினா,பச்சைமிளகாய் இவற்றை மிக்சியில் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துகொள்ளவும்.
கோதுமை மாவில் இந்த விழுது,இஞ்சி பூண்டு விழுது,சீரகபொடி,உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி பூரி செய்ய தேவையான அளவு பிசைந்து வைத்துகொள்ளவும்.
இந்த மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.