31.2 C
Chennai
Tuesday, Nov 5, 2024
110
கூந்தல் பராமரிப்பு

பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்..!

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை. ஒருநாள் தலையை அலசவில்லையென்றால் கூட அரிப்பெடுத்து, காலி பண்ணிவிடும்.
இந்தப் பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்..!

வசம்பைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைப்பகுதியில் படும்படி தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து அலசி வந்தால் பொடுகு ஓடிப்போகும்.

தேங்காய் எண்ணெயுடன் வேப்பம்பூவைக் காய்ச்சி இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வருவதும் நல்ல பலன் தரும்.

இன்னொரு வழியும் உண்டு.

வேப்பிலை, வசம்பு, வால் மிளகு மூன்றையும் நன்கு அரைத்து, மயிர்க்கால் களிலும் தலையிலும் படும்படி, தடவி அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள்.

‘‘அட.. இப்போல்லாம் நீங்க தலையில கை வைக்கிறதே இல்லையே..?!’’ என்று அக்கம்பக்கத்துத் தோழிகள் ஆச்சரியப்படுவார்கள்.

இந்நோய் உள்ளவர்களுக்குத் தோலின் தன்மையில் மாற்றம் காணப்படும். தலை, கண் புருவம், மூக்கு, உதடு, காதின் பின்பகுதி, நெஞ்சு போன்ற பகுதிகளில் இது வரலாம்.

பின்னர் இது பொடுகு போல மாறும். அரிப்பு ஏற்படும், முடி உதிரும்.

பார்த்தவுடன் இதைக் கண்டறிந்துவிட முடியும். ஒரு சிலருக்கு வெயில் காலத்தில் இது அதிகமாவதை நான் பார்த்திருக்கிறேன்.

கவனமாக இருந்து மனஅழுத்தத்தை குறைத்தால் இது மாறிவிடும். இது Psoriasis இல்லை என்பதை, பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

இதற்கு ஏலாதி தைலம், வெட்பாலை தைலம், ஊமத்தையிலை தைலம் ஆகியவற்றைத் தேய்ப்பது சிறந்தது.

இவை அல்லாமல் கீழ்க்கண்ட கைமுறைகளைப் பயன்படுத்திப் பொடுகு தொல்லையை மாற்றலாம்.

110

# வெந்தயத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால், உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும்.

# வால் மிளகுத் தூளுடன் பால் சேர்த்துத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும்.

# தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

# பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர்க் குளிக்க வேண்டும்.

# கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

# தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம்.

# வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

# துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்லது.

# வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும்.

# நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்வது நல்லது.

# பசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

# அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.

# காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.

இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயைத் தலையில் தேய்த்து 1/2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.

# சின்னவெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும்.

மேற்படி முறைகளில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் தலையிலுள்ள பொடுகுத் தொல்லையை நீக்கலாம்.

அதற்குப் பிறகு மகா திக்தக கிருதம், இரவில் 2 ஸ்பூன் சாப்பிடலாம். 15 நாட்களுக்குப் பிறகு திரிவிருத் லேகியம் கொண்டு மலசுத்தி செய்யலாம்.

Related posts

வேப்பம்பூ- பொடுகு பிரச்னை தீரும் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டுமா…..பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு ஆரோக்கியமான நீண்ட கூந்தல் வேண்டுமா?..

sangika

எளிமை… வலிமை… கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை!

nathan

நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றவும் தேன் உதவுகிறது

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முக அழகை வசிகரமாக்கும் வண்ண கூந்தல்!

nathan

கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை தூண்டும் மசாஜ்

nathan

குழந்தைகளுக்கு ஏற்படும் நரை முடிக்கான 5 பயனுள்ள வீட்டு வைத்தியம்

nathan

கோடை கால கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்

nathan