பொடுகு வருவதற்கு வெளிப்புற மற்றும் உட்புற மோசமான ஆரோக்கியமற்ற சூழ்நிலையே காரணமாகும். இதனை எப்படி வெங்காயச் சாறு குணமாக்கும் என பார்க்கலாம்.
பொடுகு தொல்லைக்கு தீர்வு தரும் வெங்காயச்சாறு
இப்போதுள்ள இளம் தலைமுறையினர் பொடுகு தொல்லையால் அவதிப்படுகின்றனர். அதுவும் சிலருக்கு குளிர்காலத்தில் தீவிரமாக இருக்கும். செதில் செதிலாக தலைச் சருமம் உதிரும். இதனை போக்க பொடுகு ஷாம்புவை போடுவது தவறு. ஏனென்றால் அவை கூந்தலை இன்னும் வறட்சியடையச் செய்து மோசமான விளைவை தந்துவிடும்.
பொடுகு வருவதற்கு வெளிப்புற மற்றும் உட்புற மோசமான ஆரோக்கியமற்ற சூழ்நிலையே காரணமாகும். ஹார்மோன் பிரச்சனை, சுகாதாரமில்லாமலிருப்பது, இவையெல்லாம் உட்புற காரணங்கள். உபயோகப்படுத்தும் ஷாம்பு, நீர், கலரிங்க் ஆகியவை வெளிப்புற காரணங்கள். இதனை எப்படி வெங்காயச் சாறு குணமாக்கும் என பார்க்கலாம்.
பச்சைப் பயிறு பொடி செய்து அதில் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள். விரைவில் பலன் தெரியும்.
பீட்ரூட் பொடுகு சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டை சாறெடுத்து அதனுடன் சம அளவு வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள்.
2 ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அதனை அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு காணாமல் போய்விடும்.
கற்றாழை ஜெல்லுடன் வெங்காயச் சாறு கலந்து தலைக்கு தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். இது நல்ல பலனைத் தரும். வாரம் 3 நாட்கள் செய்யலாம்.
தீவிரமாக பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாறையும் வெங்காயச் சாறையும் சம அளவு எடுத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். பலன் கிடைக்கும்.