முடி உதிரும் பிரச்சினை பலரை இன்று வாட்டி வதைக்கிறது. முடி இதே போல தொடர்ந்து உதிர்ந்து கொண்டே போனால் வழுக்கை ஏற்படும். முடி உதிரும் பிரச்சினைக்கு மூல காரணமாக இருப்பவை பொடுகு, அழுக்கு, தலையில் ஏற்பட கூடிய புண்கள் தான்.
பொடுகினால் வழுக்கை ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கும், ஆயுர்வேத மூலிகை லோஷன்..!
இவற்றில் குறிப்பாக பொடுகு தொல்லை பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். தலையில் அதிக பொடுகுகள் இருந்தால் முடி உதிர தொடங்கும். நாளுக்கு நாள் இந்த பிரச்சினை அதிகரித்து வழுக்கை ஏற்படும்.
இந்த பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கிறது இந்த ஆயுர்வேத மூலிகை குறிப்புகள்.
பொடுகும் ஆயுர்வேதமும்..!
முடி உதிரும் பிரச்சினைக்கு முதல் படியாக இருப்பவை இந்த பொடுகுதான். பொடுகுகளை ஒழிக்க பல வழிகள் இருந்தாலும், இயற்கை வழிகள் மிக சிறந்தவையாக செயல்படுகிறது.
தலையில் உள்ள பொடுகுகள் அனைத்தையும் இது போக்க வல்லது. ஆயுர்வேத மூலிகை லோஷன்கள் பொடுகை விரட்டி அடிக்க பெரிதும் உதவுகிறது.
துளசி லோஷன்
மூலிகைகளில் மிக சிறந்தது இந்த துளசி. உடலில் ஏற்பட கூடிய நோய்கள் பலவற்றில் இருந்து இது காக்க வல்லது. உங்களின் பொடுகு தொல்லையை ஒழிக்க இந்த துளசி லோஷன் நன்கு உதவும்.
தேவையானவை :-
துளசி 20
நீர் 4 கப்
செய்முறை :-
முதலில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் துளசி இலைகளை போட வேண்டும். 20 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.
இந்த நீரை தூங்க போகும் முன் தலையில் தடவி கொண்டு தூங்கவும். மறுநாள் தலையை அலசவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி விடும்.
சிறந்த லோஷன்
இந்த லோஷனை தயாரித்து தலைக்கு தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த லோஷன் பல வித மாற்றங்களை நமது தலையில் ஏற்படுத்தும். குறிப்பாக பொடுகில் இருந்து விடுதலை தரும்.
தேவையானவை :-
யோகர்ட் 2 ஸ்பூன்
ரோஸ்மேரி எண்ணெய் 1 ஸ்பூன்
எலுமிச்சை எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை :-
முதலில் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் யோகர்டை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை எண்ணெயையும் சேர்த்து நன்கு கலந்து கொண்டு தலையில் தடவவும்.
5 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் சிகைக்காய் பயன்படுத்தி குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் பொடுகுகள் முற்றிலுமாக குணமாகி விடும்.
பார்ஸ்லி லோஷன்
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு இந்த லோஷன் சிறப்பாக உதவும்.
இதனை தயாரிக்க தேவையானவை…
பார்ஸ்லி 1/2 கப்
தண்ணீர் 4 கப்
செய்முறை :-
நீரை கொதிக்க விட வேண்டும். அடுத்து இதில் இந்த பார்ஸ்லியை சேர்த்து சிறிது நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்.
சிறிது நேரம் ஆறிய பிறகு இதனை தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும். இந்த குறிப்பை வாராவாரம் செய்து வத்தல் பொடுகு பிரச்சினை தீர்ந்து விடும்.
ஆப்பிள் சிடர் வினிகர் லோஷன்
2 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து தலைக்கு தேய்த்தால் பொடுகு தொல்லை முழுவதுமாக போய் விடும்.
இந்த குறிப்பு முடி உதிர்வதையும் தடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், தலையில் புண்கள் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளும்.