தேவையான பொருட்கள் :
சாதம் – 2 கப்
நெய் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
வறுத்து அரைக்க :
மிளகு – 3 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
புளி – சிறிது
தாளிக்க :
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை
செய்முறை :
* சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், புளி போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்த பின் சாதம், உப்பு, பொடித்த மிளகு பொடியை போட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.
* சுவையான பொடித்த மிளகு சாதம் ரெடி.