தேவையான பொருட்கள் :
கரும்புச்சாறு – 2 கப்
பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – கால் கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
நெய், முந்திரி, திராட்சை – தேவைக்கு
செய்முறை :
* பச்சரிசி, பாசிப்பருப்பை சுத்தம் செய்து குழைய வேக வைக்கவும்.
* நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.
* அடி கனமான வாணலியில் நெய் ஊற்றி வெந்த அரிசி, பருப்புகலவையுடன் கரும்புசாறு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க
விடவும். கடைசியாக முந்திரி, திராட்டையை மேலே தூவி இறக்கி பரிமாறவும்.
* கரும்பு சாறே இனிப்பு மிகுந்தது என்பதால் வெல்லம் சேர்க்க தேவையில்லை.