தேவையான பொருட்கள் :
பருப்பு தண்ணீர் – அரை கப்
பைனாப்பிள் – 1 கப்
தக்காளி – 1
புளி – 1 நெல்லி அளவு
உப்பு – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பூண்டு – 4 பல்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
மிளகு சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பெருங்காய தூள் – சிறிதளவு
கொத்துமல்லித்தழை – சிறிதளவு
செய்முறை :
* பைனாப்பிளை மசிக்கவும்.
* சிறிது பைனாப்பிளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* தக்காளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
* புளியை 3 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும்.
* புளித்தண்ணீரில் பருப்பு தண்ணீர், பைனாப்பிள், தக்காளி, நசுக்கிய பூண்டு, மஞ்சள் பொடி, உப்பு, தனியா தூள், மிளகு சீரகப் பொடி, சேர்க்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து கடுகு, உளுந்து போட்டு வெடித்ததும் சீரகம், வெந்தயம், பெருங்காய தூள், வரமிளகாய். கறிவேப்பிலை பொரிந்ததும் புளிக்கரைசலை ஊற்றி நு்ரைத்துக் கொதிவரும் நிலையில் எடுத்து கொத்துமல்லி, பொடியாக நறுக்கிய பைனாப்பிள் தூவி இறக்கவும்.
* சுவையான பைனாப்பிள் ரசம் ரெடி. இதை அப்படியே சூப் போலவும் குடிக்கலாம்.