என்னென்ன தேவை?
பைனாப்பிள் துண்டுகள் – 3/4 கப்,
தினை – 1/2 கப், குங்குமப்பூ (பாலில் ஊற வைத்தது) – ஒரு சிட்டிகை,
நெய் – 4 டேபிள்ஸ்பூன்,
முந்திரித் துண்டுகள் – 1/4 கப்,
திராட்சை – 10,
பனைவெல்லம் அல்லது பனைகற்கண்டு – 3/4 கப்,
வறுத்த ரவை – 1/2 கப்.
எப்படிச் செய்வது?
1 டேபிள் ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் தினையை லேசாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும். ஆறியவுடன் வறுத்த தினையை மிக்ஸியில் ரவை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் 11/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் பைனாப்பிள் துண்டுகளைப் போடவும்.
மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வறுத்த தினை ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கட்டி இல்லாமல் கிளறவும். மிதமான தீயில் சுத்தப்படுத்திய பனைகற்கண்டு அல்லது பனைவெல்லத்தை சேர்க்கவும். இச்சமயத்தில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கேசரி சுருண்டு வரும் போது வறுத்த முந்திரி, திராட்சை, சிறிது பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து இறக்கி சூடாக கலந்து பரிமாறவும். பொடித்த பைனாப்பிள் கொண்டு அலங்கரிக்கவும்.