பேரீச்சையின் இனிப்பும் புதிதாக வறுக்கப்பட்ட காபியின் வாசனையும் ஒன்று சேரும் சூப்பராக இருக்கும். இப்போது பேரீச்சை வித் காபி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பேரீச்சை வித் காபி மில்க் ஷேக்
தேவையான பொருட்கள் :
கொட்டை இல்லா பேரீச்சை – 1 கப்
உடனடி காபி பவுடர் – 10 தேக்கரண்டி
பால் – 6 கப்
பச்சை ஏலக்காய் – 6
சர்க்கரை – 3 டீஸ்பூன்
புதிய கிரீம் – ¾ கப்
ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு
செயல்முறை :
* பேரீச்சை பழங்களின் கொட்டைகளை நீக்கி அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் காபி பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
* அடுப்பில் உள்ள காபி டிகாஷனுடன் சர்க்கரை, பச்சை ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சர்க்கரை நன்றாக கரையும் வரை காத்திருக்கவும். அதன் பின்னர் அடுப்பை அணைத்து சூடு ஆறும் வரை வைத்திருக்கவும்.
* மிக்ஸியில் பேரீச்சைகளை போட்டு அதனுடன் சிறிது பால் சேர்த்து நன்கு அரைக்கவும்.
* அடுத்து இதனுடன் ஐஸ் க்யூப்ஸ், ஆறவைத்த காபி டிகாஷன், பால் மற்றும் புதிய கிரீம் போன்றவற்றை சேர்த்து மீண்டும் நன்கு நுரை வரும் வரை அடிக்கவும். மிக்ஸியில் போட்டுள்ள பொருட்கள் நன்கு கடையப்பட்டு ஒன்று சேரும் வரை கலக்கவும்.
* ஒரு உயரமான கண்ணாடி டம்ளாரில் இந்த மில்ஷேக்கை ஊற்றி அதன் மீது சிறிது காபி டிகாஷன் விட்டு மில்க் ஷேக்கை அலங்கரிக்கவும்.
* இப்பொழுது பேரீச்சை வித் காபி மில்க் ஷேக் ரெடி.