என்னென்ன தேவை?
வெங்காயம் (பெரியது) – 1,
பேபி உருளைக்கிழங்கு – 15,
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
தயிர் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
கடுகு – தாளிக்க தேவையான அளவு,
இஞ்சி-பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
எண்ணெய் – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் கடுகு தாளித்து இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். அதனுடன் உருளைக்கிழங்கை தோல் உரித்துச் சேர்க்கவும். மிளகுத் தூள் தூவி விடவும். பிறகு தயிர் சேர்க்கவும். இறக்கும் நேரத்தில் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.