beetroot poriyal 17 1466146761
சைவம்

பேச்சுலர்களுக்கான… பீட்ரூட் பொரியல்

வாரம் ஒருமுறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், தவறாமல் பீட்ரூட்டை அடிக்கடி சமைத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு பீட்ரூட்டை பொரியல் செய்து கொடுப்பது சிறந்த வழி.

இங்கு பீட்ரூட் பொரியலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த பொரியல் பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 1 (பெரியது மற்றும் நறுக்கியது) பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது) துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு… எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை: முதலில் பீட்ரூட்டை சுத்தமாக நீரில் கழுவி, தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு குக்கரில் போட்டு, பீட்ரூட் மூழ்கும் வரை நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து தண்ணீர் முற்றிலும் வற்றியதும், அதில் சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, பின் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி!!!

beetroot poriyal 17 1466146761

Related posts

நூல்கோல் குழம்பு

nathan

காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை

nathan

சுவையான பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

கோயில் புளியோதரை

nathan

புளியோதரை

nathan

பேபிகார்ன் ஃப்ரை

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan

கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு

nathan

தக்காளி பிரியாணி

nathan