வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. பேச்சிலருக்கான வெண்டைக்காய் மோர் குழம்பை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்பு
தேவையான பொருட்கள் :
புளித்த தயிர் – 1 கப்
வெண்டைக்காய் – 10
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு…
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 1
தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை :
* வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* தயிரை நன்றாக கடைந்து வைத்து கொள்ளவும்.
* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை போட்டு, நன்கு வதங்கும் வரை வதக்கி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த, பின் தயிர் ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், வெண்டைக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி!!!