பெண்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்க உடலில் உள்ள முடிகளை ஷேவ் செய்வது வழக்கம். ஆனால், அவ்வாறு ஷேவிங் செய்யும்
பெண்கள் பல தவறுகளை செய்கின்றனர். அதனால் அவர்களுக்கு சரும பிரச்சனைகள், சரும எரிச்சல்கள் எல்லாம் வருகின்றன.
சருமத்தில் முடிகளை அகற்ற ஷேவிங் செய்யும் பெண்கள் சில விஷயங்களை தெரிந்து செய்வது நல்லது. நீங்களாகவே சிலவற்றை
தெரியாமல் செய்து, பின் அவதிக்குள்ளாகதீர்கள்.
எப்போதுமே பெண்கள் குளிப்பதற்கு முன்பே கால்களில் இருக்கும் முடியை ஷேவிங் செய்து விடுவார்கள். ஆனால், அப்படி செய்வதை
விட, நீங்கள் குளித்த பிறகு ஷேவிங் செய்வது நல்லது.
ஏனெனில், ஈரமான பிறகு முடி இலகுவாகிவிடும். எளிதாக ஷேவிங்
செய்துவிடலாம். மற்றும் எரிச்சல் மிக குறைவாக இருக்கும்.
பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக கால்களில் உள்ள முடிகளை ஷேவிங் செய்வார்கள். ஆனால், இரவு
முழுவதும் உறங்கி எழுந்த பின், சருமமும், முடியும் சற்று கடினமாக இருக்கும்.
அதனால், முடிந்த வரை இரவு தூங்க போகும்
முன்னரே ஷேவிங் செய்துவிடுவது நல்லது.
பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக கால்களில் உள்ள முடிகளை ஷேவிங் செய்வார்கள். ஆனால், இரவு
முழுவதும் உறங்கி எழுந்த பின், சருமமும், முடியும் சற்று கடினமாக இருக்கும்.
அதனால், முடிந்த வரை இரவு தூங்க போகும்
முன்னரே ஷேவிங் செய்துவிடுவது நல்லது.
எப்போதுமே கால்களில் உள்ள முடிகளை ஷேவிங் செய்யும் போது முதலில் கீழ்வாறாக ஷேவிங் செய்யுங்கள். பின்பு நன்கு நீரில்
கழுவிய பிறகு. மறுபடியும் ஃப்போம் அப்பளை செய்து, மேல்வாறாக ஷேவிங் செய்யுங்கள்.
ஒருவேளை உங்களது சருமம் மிக
மென்மையாக இருந்தால் மேல்வாறு ஷேவிங் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.
ஷேவிங் செய்யும் போது, எப்போதும் ஷேவிங் லோஷன் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது
சிராய்ப்புகள் ஏற்பட்டாலோ லோஷனை உபயோகப்படுத்துவது அவசியம். இல்லையெனில் காயங்கள் எளிதில் ஆறாது.