ஒல்லியானவர்கள் ஹை காலர் நெக் அல்லது பின்புறம் க்ளோஸாக வந்து முன்புறம் பாட் நெக் அல்லது யு-நெக் மாதிரி தைத்துக் கொண்டால் பொருத்தம். பாதி காலர் நெக் என்றால் முன்பக்கம் யு, ப வடிவில் தைத்துக் கொள்ளலாம்.
ரொம்ப லோ நெக் வேண்டாம். எலும்பு துருத்திக் கொண்டு, மேலும் உங்களை ஒல்லியாகக் காட்டும். கை மட்டும் ஒல்லியாக இருப்பவர்கள் கஃப் ஸ்லீவ், பட்டர்ஃப்ளை ஸ்லீவ் வைத்துத் தைத்துக் கொள்ளலாம். கை சற்று குண்டாகக் காண்பிக்கும். கழுத்தின் முன் அல்லது பின்புறம் டிசைன் வைத்த பிளவுஸ் தைத்துக் கொள்ளலாம்.
சற்று சதைப் பிடிப்பு இருப்பவர்களுக்கு லோ நெக் அழகாக இருக்கும். பிளவுஸ் முழுக்கை, முக்கால் கை, நடுத்தர கை எல்லாமே உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். ஸ்லீவ் லெஸ், ஷார்ட் ஸ்லீவ், மெகா ஸ்லீவ் ஓகே. ஷார்ட் ஸ்லீவ் சற்று லூசாக தையுங்கள். குச்சி போல கை உள்ளவர்கள் ஷார்ட் ஸ்லீவ் அணிய வேண்டாம்.
அகல ஜரிகை, ரெட்டை பேட்டு ஜரிகை ஆகியவற்றை நீங்கள் அணிந்து கொள்ளும் உடைக்கேற்ப தைத்துக் கொள்ளலாம். ப்ளைய்ன் பிளவுஸூக்கு கையில் மட்டும் லேஸ் வைத்து தையுங்கள். பிளவுஸின் உயரம் உங்கள் புடவையின் உயரத்திலிருந்து 4 இன்ச் வரை இருக்கலாம். டிசைன் பிளவுஸில் ஜரிகை, ஜம்கி, மணி போன்றவை வைத்து தைத்தால் மேலும் அழகூட்டும். சற்றே புடவையை இறக்கிக் கட்டினாலும் அழகாகவே இருக்கும்.