பொதுவாக பெண்களுக்கு அழகே கண்கள் தான். கண்கள் அழகாக இமைகள் கொஞ்சம் பெரிதாக இருந்தால் அது அவர்களின் அழகு இன்னும் வசீகரமாக இருக்கும். கண் இமைகள் காற்றில் ஏற்படும் தூசுகளால் கண்களுக்கு எந்த பிரச்சினையும் வராமல் பாதுகாக்கிறது.
கண் இமைகள் கொஞ்சம் கம்மியாக இருப்பவர்கள் கடைகளில் விற்கும் செயற்கை கண் இமைகளை வாங்கி பொறுத்திக் கொள்கிறார்கள். கவலையை விடுங்கள்.
உங்கள் கண் இமைகள் கொட்டாமல் இருப்பதற்கும், இமைகள் அடர்த்தியாக வளர்வதற்கும் வீட்டில் உள்ள சாதாரண பொருட்களை வைத்து உங்கள் கண்களில் உள்ள ரோமங்களை அடர்த்தியாக மாற்றி விடலாம்.
அந்தவகையில் கண் இமைகள் அடர்த்தியாக வளர என்ன செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் அலோ வேரா ஜெல்லை இரவில் கண் இமைகளின் மேல் தடவி வர அவை அடர்த்தியாகவும் வலிமையாகவும் வளரும்.
ஆலிவ் எண்ணெய் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கும், கண் இமைகளுக்கும் சிறப்பான ஒரு இயற்கைத் தீர்வாகும். இந்த எண்ணெய் வைட்டமின் E மற்றும் ஒலிக் அமிலம் நிறைந்திருக்கிறது. இது உங்கள் கண் இமைகளுக்கு ஊட்டச்சத்து அளித்து அடர்த்தியை அதிகரிக்கும்.
வாசலினை மஸ்காரா பிரஷின் மூலம் கண் இமைகளின் மேல் பிரஷ் செய்ய வேண்டும். இது கண் இமைகளை அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரச் செய்யும்.
தேங்காய்ப் பாலை பஞ்சில் ஊரவைத்து கண்களின் மேல் வைக்கவும். இது கண் இமைகளுக்கு தேவையான மிருதுத்தன்மையையும் அடர்த்தியையும் கொடுக்கும்.
கிரீன் டீ தூள் உங்களது வீட்டில் இருந்தால், அதை சுடு தண்ணீரில் போட்டு வடிகட்டி அந்த நீரை கண்களின் இமைப் பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பாதி அளவு எலுமிச்சை தோலை, ஆலிவ் எண்ணையில் காலையிலேயே ஊற வைத்துவிட வேண்டும். பின்பு இரவு நேரத்தில் எலுமிச்சை பழ தோலுடன் சேர்த்து ஊற வைத்த அந்த ஆலிவ் எண்ணையை கண் இமைகளில் தடவி வர நல்ல பலன் உண்டு.
வெண்ணையை விரல்களில் லேசாக தொட்டு கண் இமைகளில் தடவ, கண் இமை முடி உதிர்வு குறையும்.