26.9 C
Chennai
Tuesday, Nov 5, 2024
nayanthara 163
சரும பராமரிப்பு

பெண்களே நயன்தாரா மாதிரி எப்பவும் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா?

நீங்கள் உங்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள நினைப்பவரா? அதற்காக சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களைக் கொடுப்பீர்களா? வெறும் அழகுப் பொருட்களால் பராமரிப்பு கொடுத்தால் மட்டும் சருமம் அழகாக இருக்காது. சருமத்தின் ஆரோக்கியத்திற்கு ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்ற குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியம். இத்தகைய சத்துக்களை உணவுகளின் மூலம் எளிதில் பெறலாம். சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் தினமும் போதுமான அளவில் கிடைத்தால், சருமமானது நீண்ட காலம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

உங்களுக்கு சரும ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த உதவும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நிறைந்த பானங்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அடிக்கடி குடித்து வந்தால், நீங்களும் இளமையாக மற்றும் அழகாக காட்சியளிக்கலாம்.

கிவி மோஜிடோ

உங்கள் உணவின் மூலம் அதிகளவு வைட்டமின் சி-யை பெற நினைத்தால், கிவியை சேர்த்துக் கொள்ளுங்கள். இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஆற்றலுடன் செயல்பட வைக்கும். உங்களுக்கு கிவி பழத்தை சாப்பிட பிடிக்காவிட்டால், கிவி பழத்தின் தசைப் பகுதியை மிக்சர் ஜாரில் போட்டு அடித்து, பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடியுங்கள். இது மிகவும் ருசியாக இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ்

மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான பானங்களின் பட்டியலில் இடம் பெற்ற ஓர் ஜூஸ் என்றால் அது ஆரஞ்சு ஜூஸ் தான். சிட்ரஸ் பழமான ஆரஞ்சு பழத்தில் வைட்மின் சி ஏராளமாக உள்ளது. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தவிர, உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். அதற்கு ஆரஞ்சு ஜூஸ் உடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், அந்த ஜூஸ் இன்னும் அற்புதமாக இருக்கும்.

அன்னாசி ஜூஸ்

அன்னாசிப் பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இந்த அற்புதமான பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், அது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தவிர, செரிமான ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த அன்னாசி ஜூஸ் தயாரிப்பதற்கு அன்னாசிப் பழத்துண்டுகளை பிளெண்டரில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, அத்துடன் இனிப்பு சுவைக்காக தேன் சேர்த்து குடியுங்கள்.

பெர்ரி பஞ்ச்

பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்சிடன்ட், வைட்டமின் சி மற்றும் டயட்டரி நார்ச்சத்து போன்றவை வளமாக உள்ளன. தினமும் பெர்ரி ஸ்மூத்தி தயாரித்து குடித்தால், ஒரு அற்புதமான பலனைக் காணலாம். அதற்கு அந்த ஸ்மூத்தியுடன் ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரி போன்ற பழங்களுடன், சிறிது பால் மற்றும் யோகர்ட் சேர்த்து நன்கு அடித்து பின் குடிக்க வேண்டும்.

ஆப்பிள் கேரட் ஜூஸ்

ஆப்பிளில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதிகமாக உள்ளன. இந்த ஆப்பிளுடன் கேரட், எலுமிச்சை மற்றும் செலரி சேர்த்து அரைத்து வடிகட்டி, இனிப்பு சுவைக்கு அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வர, சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, சரும ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

Related posts

கற்றாளையைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவை பேண முடியும்.

sangika

அடுப்பங்கரையில் ஒளிந்திருக்கு அழகு

nathan

நெற்றியில் சொர சொரப்பை போக்கும் எளிய சிகிச்சை

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் பழத்தோல்!

nathan

பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

பிரசவ தழும்புகளை சரி செய்வது எப்படி?.!!

nathan

வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே!

nathan

முகத்தில் எண்ணெய் வழிந்தோடும். இது அவர்களது முகத்தை பொலிவிழந்து, சோர்வுடன் காட்சியளிக்கும்

nathan

கழுத்து பராமரிப்பு

nathan