கூந்தல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் அழகான நீண்ட கூந்தல்என்றால் அனைவருக்கும் ஆசை தான். ஆனால் ஒரு சிலருக்கு தான் இந்த பாக்கியம் கிடைக்கின்றது. பலருக்கு கூந்தல் இல்லையே என்று குறை, சிலருக்கு இருக்கும் கூந்தல் கொட்டுகின்றதே என்று குறை. இதற்காக பல மருத்துவமனைகளை நாடி பணம் செலவழித்தது தான் மிச்சம் என்று பெரு மூச்சு விடுபவர்கள் பலர்.
ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் விரும்புவது கூந்தல். தற்பொழுது வரும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புக்களால் கூந்தலை கெடுத்துக் கொள்ளும் மக்கள் பலர். அலுவல் அவசரத்தால் ஈரத்துடன் கூந்தலை சீவுவது, இறுக்கமாக தலை அலங்காரம் செய்வது, கெமிக்கல் கலந்த கிரீம்களை கூந்தலுக்கு பயன்படுத்துவது என்று நம்மால் முடிந்த வரை கூந்தலை கெடுத்துக் கொள்கின்றோம்.
தற்பொழுது வரும் விளம்பரங்களை எடுத்து கொண்டால், கூந்தலுக்கான விளம்பரங்கள் தான் அதிகம். இதைப் போடுங்கள், அதைப் போடுங்கள் என்று பல விளம்பரங்கள். அதன் விலையோ அப்பா பயங்கரம். நம்மில் பலருக்கு நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கூந்தலை பாதுகாக்க முடியும் என்று தெரிவதில்லை. இதை உணரும் போது காசும் கூந்தலும் போய்விடும்.
அழகு நிலையங்களில் உங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணாக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உங்கள் கூந்தலை காத்துக் கொள்ளும் சில டிப்ஸ் உங்களுக்காக இங்கே உள்ளது. இதைப் படித்து நீங்களே செய்து பாருங்கள். பிறகு பட்டுப் போன்ற கூந்தல் உங்களுக்காக.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரம்பரிய ஹென்னா பேக்
ஹென்னாவை டீ தூளுடன் சேர்த்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இரண்டு முட்டைகளை நன்றாக அடித்து, இரண்டு தேக்கரண்டி தயிர், பாதி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, ஒரு ஸ்பூன் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை ஹென்னா-டீ கலவையுடன் சேர்த்து கலக்கவும். இதை பேக்காக தலையில் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து அலசவும். பின் கெமிக்கல் இல்லாத ஷாம்புவை போட்டு அலசவும்.
புரதம் நிறைந்த முட்டை ஹேர் மாஸ்க்
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுக்கவும். இதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கூந்தலின் மயிர்க் கால்களில் படும்படி பூசவும். பின் பிளாஸ்டிக் கவர் கொண்டு தலையை மூடவும். அரை மணி நேரம் கழித்து அலசவும். வினிகர் கொண்டு அலசுவது கூடுதல் பலன் தரும். வாரத்திற்கு மூன்று முறை இப்படி செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு ஹேர் மாஸ்க்
ஒரு பெரிய உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை உரித்து, பின் ஒரு கிண்ணத்தில் அதன் சாற்றை ஊற்றவும். அதில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும். இதை தலையில் முக்கியமாக மயிர்கால்களில் படும்படி பூசி 15 நிமிடம் அப்படியே விடவும். பின் இரண்டு மணிநேரத்திற்கு ஊற வைத்து அலசவும். இதனால் கூந்தல் வளர்வதை காண முடியும்.
தேங்காய் கிரீம் மாஸ்க்
இளம் தேங்காயின் கிரீமை எடுக்கவும். அதை லேசாக சூடு படுத்தவும். முடியின் வேர்க் கால்களில் அதைப் பூசி மசாஜ் செய்யவும். இதமான சூடு கொண்ட டவலால் தலையை மூடி, ஊற விடவும். ஒரு மணி நேரம் கழித்து அலசவும். பிறகு கெமிக்கல் இல்லாத ஷாம்புவை போட்டு அலச பட்டுக் கூந்தலை கண் குளிர காண முடியும்.
அவகேடோ மாஸ்க்
1:2 என்ற கணக்கில் அவகேடோ மற்றும் மயோனைஸ் எடுத்து கலந்து கொள்ளவும். இது அடர்த்தியாக இருப்பதால் கூந்தலுக்கு பட்டு போன்ற தன்மையை கொடுக்கும். வறண்ட பொலிவற்ற கூந்தலுக்கு இதை தடவி ஊற விட்டு, பின் அலசினால் கூந்தலின் மென்மையை உணரலாம். இப்படி தடவி முப்பது நிமிடம் கழித்து அலசினால் நல்லது.
பொடுகு நீக்கும் வெந்தய மாஸ்க்
வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற போடவும். இதை பேஸ்டாக அரைக்கவும். இதை கூந்தலின் வேர்க் கால்கள் மற்றும் நுனி முடியில் தடவி இருபது நிமிடம் அப்படியே விடவும். பின் மெல்லிய ஷாம்பு கொண்டு அலசினால் நல்ல பலன்தான்.
புரதம் நிறைந்த கடலை மாவு பேக்
கடலைப் பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அரைத்து எடுக்கவும். இதில் ஒரு முட்டையை அடித்து, கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து ஒரு கப் தயிர் சேர்த்து தலையில் தடவவும். இதை அரை மணி நேரம் கழித்து அலசினால் பலன் பெற முடியும்.
செம்பருத்தி ஹேர் பேக்
செம்பருத்தி ஹேர் பேக்
சிவப்பு செம்பருத்தி இதழ்களை எடுத்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் பேஸ்டாக்கி ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து தலையில் பேக் போடவும். அரை மணி நேரம் கழித்து அலசவும். இதனால் பட்டு போன்று கூந்தல் ஜொலிக்கும்.