இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலானோருக்கு இளநரை ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆதலால் இதனை கருப்பாக மாற்றுவதற்கு பல ஹேர் டையினை பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு நாம் பயன்படுத்தும் ஹேர் டை முடியை சேதப்படுத்துவதோடு, நிரந்தரமாக முடியை கருப்பாக மாற்றாது. ஆகையில் நாம் இயற்கையான முறையில் ஹேர் டை பயன்படுத்தினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இந்த பதிவில் எவ்வாறு பக்கவிளைவுகள் இல்லாமல் நமது கருப்பாக மாற்றலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்
வாழைப்பழம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து பிசையவும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கலவையை தலைமுடியில் தடவி 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்பு ஷாம்பூ போட்டு தலையை அலச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்யலாம்.
முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய்
முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஒரு முட்டையில் இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து பேஸ்ட்டாக கலந்து தலைமுடியில் தடவி 30 அல்லது 40 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு ஷாம்பு போட்டு அலசவும்.
உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் மஞ்சள் கருவையும், எண்ணெய் பசை கொண்ட முடியினை கொண்டவர்கள் வெள்ளை கருவையும் பயன்படுத்தவும். முட்டையின் வாசம் பிடிக்காதவர்கள், தலையில் முட்டைக் கலவையை போட்ட பிறகு கடுகு எண்ணெய்யை தடவவும்.
வெங்காய சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய்
தலைமுடியை கருப்பாக மாற்றுவதில் வெங்காய சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் நல்ல பலன் அளிக்கின்றது.
முதலில் முடியின் வேர்களில் வெங்காயச் சாற்றை தடவி, பின்னர் முடியின் மேல் முனைகளில் ஆலிவ் எண்ணெயைத் தடவவும். உங்கள் தலைமுடி கருப்பு நிறமாக மாறுவதோடு, முடி உதிர்வதும் நின்றுவிடும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்
இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யைக் கலந்து கொண்டு முடியில் வேர்களில் 10 நிமிடங்கள நன்கு மசாஜ் செய்யவும்.
பின்பு 40 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையினை அலசவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்துவந்தால் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்.