குளிர் காலத்தில் சுருக்கம் மற்றும் வறட்சி உண்டாகி முகத்தில் சின்ன தொய்வை உண்டாக்கும். முகம் எப்ப பார்த்தாலும் ஃப்ரெஷாக இருக்காது. போதாதிற்கு முகம் கருமையடைந்துவிடும்.
சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை கடைகளில் விற்கும் க்ரீம்கள் தீர்வை அளிக்காது. மாறாக இன்னும் பாதிப்புகளையே தரும். ஆகவே முடிந்த வரை வீட்டிலேயே அவற்றைப் போக்க முயற்சியுங்கள்.
மேலும் சருமம் மிக அழகாகவும், நிறம் பெறவும், முகப்பருக்களை போக்கவும், சுருக்கங்களை நீக்கவும், தழும்புகளை போக்கவும் சின்ன சின்ன குறிப்புகள் தெய்ர்ந்தால் நன்றாக இருக்கும் என உங்களுக்கு தோணுதா? இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை முயற்சித்துப் பாருங்களேன்.
சருமம் மிருதுவாக :
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை கலந்து தினமும் குளிப்பதற்கு கால் மணி நேரம் முன் உடலில் பயித்தம் மாவு அல்லது கடலைமாவு தேய்த்து குளித்தால் சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
முகம் அழகு பெற:
வெள்ளரிக்காயை சிறிது பாலுடன் கலந்து அரைத்து அதனை பஞ்சால் நனைத்து முகத்தில் கீழிருந்து மேலாகத் தேய்த்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் போய் முகம் தேஜஸ் பெறும். நிறமும் கூடும்.
சுருக்கம் மறைய :
பாதாம் பொடி, ஆலிவ் எண்ணெய், வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த பாலில் முகத்தை கழுவி தண்ணீரில் கழுவ வேண்டும். 10 நாட்கள் செய்தால் முகம் தனி அழகு பெறும்.
கூந்தல் பளபளப்பாக :
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால் தலையில் இருக்கும் அழுக்கு நீங்கி தலைமுடி பளபளக்கும்.
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற :
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
பொலிவான முகம் கிடைக்க :
வெயிலில் சென்று வந்தால் முகம் கறுத்துவிடும். அவர்கள் மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். நிறம் மெருகேறும்.
கருமை மறைய :
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
உடல் புத்துணர்வு பெற :
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
சிவப்பு நிறம் பெற :
ஆரஞ்சுப் பழத் தோலை காய வைத்து அதனுடன் பாசிப்பயிறையும் சேர்த்து அரைத்து தினமும் சொப்புக்குப் பதிலாக உபயோகித்து குளித்து வந்தால் சற்று மாநிறமாக இருப்பவர்கள் கூட சிவப்பாக மாறுவார்கள்.
வியர்வை நாற்றம் போக்குவதற்கு :
ஆரஞ்சுப் பழத் தோலை சுமார் ஒரு வாரம் வரை நீரில் ஊற வைத்து அந்த எசென்ஸை பிரிட்ஜில் வைத்து அதை தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை வாடையே வராது. தோலும் மென்மையாக மாறிவிடும்.
நகங்கள் அழகாக வெட்ட :
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
கைகால் முட்டியின் கருமை நிறம் போக :
கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க ஆரஞ்சு சாறை தேய்த்து காய்ந்தவுடன் கழுவி வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.