facepack 1517396041
முகப் பராமரிப்பு

பெண்களே கண்டதை முகத்துக்கு போடாம அழகை அதிகரிக்கணுமா?

குளிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. பலருக்கும் சரும வறட்சி மற்றும் சரும உரிதல் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பமாகியிருக்கும். மிகவும் குளிர்ச்சியான காலநிலையால் குளிர்காலத்தில் சருமம் பலவித பிரச்சனைகளுக்கு உள்ளாகும். எனவே சருமத்தின் ஈரத்தன்மையைப் பராமரிக்க மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அதே சமயம் சரும அழகு பாதிப்படையாமல் பொலிவோடு இருக்க ஒருசில உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சரும அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சருமத்தின் பொலிவை மேம்படுத்தும் பல்வேறு உணவுகள் உள்ளன. இந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், குளிர்காலத்தில் சந்திக்கும் சரும பிரச்சனைகளைத் தடுத்து, அழகாக ஜொலிக்கலாம். இப்போது குளிர்காலத்தில் சருமத்தில் பொலிவை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகளைக் காண்போம்.

 

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது. இது ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்தாகும். ஏனெனில் வைட்டமின் ஈ சருமத்தில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் பாதிப்படைந்த சருமத்தை சரிசெய்யும். அதற்கு சூரியகாந்தி விதைகளை வறுத்து ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடலாம் அல்லது சாலட் மீது தூவியும் சாப்பிடலாம்.

வால்நட்ஸ்

மூளைப் போன்ற வடிவத்தைக் கொண்ட வால்நட்ஸ் உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்கவும், சருமத்தை பொலிவோடு வைத்திருக்கவும் உதவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளதால், சரும அழற்சியைத் தடுக்க உதவும். வால்நட்ஸில் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான நம் உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாத அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அதற்கு வால்நட்ஸை இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். வால்நட்ஸை ஊற வைத்து சாப்பிடுவதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.

சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய்

வண்ணமயமான குடைமிளகாயில் கரோட்டின் உள்ளது. இந்த கரோட்டின் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றமடைகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமின்றி, வெயிலால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுக்கும். கரோட்டின் நிறைந்த குடைமிளகாய் சரும நிறத்தை அதிகரித்து, சரும பொலிவை மேம்படுத்தவும் உதவும்.

அவகேடோ

அவகேடோவில் உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடிய ஆரோக்கியமான கொழுப்புக்கள் முழுமையாக நிறைந்துள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புக்கள் சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மை அளிப்பதோடு, சருமம் வறட்சியடையாமலும் தடுக்கும். அவகேடோவில் உள்ள வைட்டமின் ஈ, சரும பாதிப்பைத் தடுக்கும். இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உருவாக்கும் மற்றும் பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்யும்.

டார்க் சாக்லேட்

சாக்லேட் சாப்பிட்டால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் டார்க் சாக்லேட்டில் கொக்கோ உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளன. இது சரும அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சருமத்தில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகள்

குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே கிடைக்கும் குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. அவற்றை உட்கொள்வது கூடுதல் நன்மைகளைப் பெற உதவும். அதிலும் குளிர்காலத்தில் ஆரஞ்சு, சாத்துக்குடி, சீத்தாப்பழம் போன்ற பழங்கள் மற்றும் பசலைக்கீரை, முட்டைக்கோஸ் மற்றும் வெந்தயக் கீரை போன்ற காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன.

Related posts

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி,

nathan

பெண்களே பார்லரே போகாம கலராகணுமா?…

nathan

கண்ணாடி அணியும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ்

nathan

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

nathan

கரும்பு சாறினால் கருவளையம் போக்க முடியுமா?

nathan

ஆண்களே உங்களுக்குதான் இந்த விஷயம்! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… முகத்திற்கு பாதிப்பு தரும் பொருட்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கரும்புள்ளிகளை நீக்க சில சிம்பிளான வழிகள்!!!

nathan

வீட்டிலேயே நாமாகவே ஃபேஷியல் செய்யும் முறை

nathan