பருப்பு வகைகளில் அதிகளவு புரோட்டீன் சத்துக்கள் உள்ளன. நட்ஸ் ரைஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்
தேவையான பொருட்கள் :
சாதம் – ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை – தலா 50 கிராம்,
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு – தலா 15,
உலர்ந்த திராட்சை – 20,
நெய் – 1 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் நெய் விட்டு வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, உலர்ந்த திராட்சை சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும்.
* அடுத்து அதில் சாதம், உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
* புரோட்டீன் அதிகம் உள்ள இந்த நட்ஸ் ரைஸ், உடனடி எனர்ஜி கொடுக்கும்.