31.2 C
Chennai
Tuesday, Nov 5, 2024
சிற்றுண்டி வகைகள்

பிள்ளையார்பட்டி மோதகம்:

தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப் பாசிப்பருப்பு – 1/4 கப் வெல்லம் – 3/4 கப் நெய் – 1 டேபிள் ஸ்பூன் + சிறிது தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 2 மற்றும் 3/4 கப்

செய்முறை: முதலில் பச்சரியை வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் பாசிப்பருப்பை போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்ஸியில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ளதை போட்டு, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து 3 நிமிடம் கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் நன்கு கரைந்து பாகு போன்று வந்ததும், அதில் மீதமுள்ள நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் வறுத்து வைத்துள்ள மாவை சேர்த்து கிளறி விட வேண்டும். தண்ணீர் முற்றிலும் வற்றி, சற்று கெட்டியானதும் சிறிது நெய் சேர்த்து மீண்டும் கிளறி விட வேண்டும். பின் அதில் தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைக்க வேண்டும். அடுத்து கையில் சிறிது நெய் தடவி அந்த மாவை சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிள்ளையார்பட்டி மோதகம் ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/sweets/pillayarpatti-mothagam-recipe-ganesh-chaturthi-012556.html

Related posts

சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை

nathan

பிரெட் மஞ்சூரியன் செய்ய….

nathan

இந்த பனீர் பாப்கார்னை செய்து பாருங்கள்.

nathan

சூப்பரான சிக்கன் – முட்டை பொடிமாஸ்

nathan

முளயாரி தோசா

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா

nathan

சத்தான திணை கார பொங்கல்

nathan

மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்

nathan

சுவையான பாலக்கீரை ரவா தோசை

nathan