தேவையான பொருட்கள்:
உள்ளே வைப்பதற்கு…
* பெரிய உருளைக்கிழங்கு – 2
* பச்சை மிளகாய் -1-2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
* புதினா – சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
* மாங்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
பஜ்ஜி மாவிற்கு…
* கடலை மாவு – 1 கப்
* ஓமம் – 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* தண்ணீர் – தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
பிற பொருட்கள்..
* பிரட் – 4-5 துண்டுகள்
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் மசித்த உருளைக்கிழங்குடன், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கடவை மாவு, ஓமம், மிளகாய் தூள், கரம் மசாலா, பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்க உப்பு சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த பஜ்ஜி மாவானது மிகவும் நீராகவோ அல்லது மிகவும் கெட்டியாகவோ இருக்கக்கூடாது. மிதமான அளவில் இருக்க வேண்டும்.
Stuffed Bread Bajji Recipe In Tamil
* பிறகு பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் சிறிது உருளைக்கிழங்கு கலவையை பரப்பி, அதன் மேல் மற்றொரு முக்கோண வடிவ பிரட் துண்டை வைத்து, சாண்விட்ச் போன்று வைக்க வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், செய்து வைத்துள்ள சாண்ட்விச்சை தயாரித்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான ஸ்டப்டு பிரட் பஜ்ஜி தயார்.