என்னென்ன தேவை?
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிது,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 2 பல்,
பிடிகருணை (மசித்தது) – 1 கப்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகு சேர்க்கவும். இஞ்சி, பூண்டு சேர்க்கவும். இத்துடன் தக்காளியைப் போட்டு நன்கு வதங்கியபின் ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றவும். தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் மசித்த கிழங்கு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் கொத்தமல்லி நறுக்கிச் சேர்த்துப் பரிமாறவும்.