என்னென்ன தேவை?
பாலக் கீரை – ஒரு சிறிய கட்டு,
பூண்டு – 3 பல்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத் தூள் – 3/4 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
பால் – 1/2 கப்,
கார்ன்ஃப்ளோர் – 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் வெண்ணெய் சேர்த்து பூண்டை உரித்துப் போட்டு வதக்கவும். அத்துடன் பாலக் கீரையை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பிறகு, சிறிது சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். கார்ன்ஃப்ளோரை பாலுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். வெந்த பாலக் கீரை ஆறியவுடன் அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அரைத்த விழுது, பால் கலவை, தேவையான தண்ணீர், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 2 கொதிவிட்டு சூடாகப் பரிமாறவும்.