என்னென்ன தேவை?
சிறுபூரி: 10
உருளைகிழங்கு: 100 கிராம் (வேகவைத்தது)
நறுக்கிய வெங்காயம்: 1
புதினா, கொத்தமல்லி : தலா 1 கைப்பிடி அளவு
கரம் மசாலா தூள்: 1 டீஸ்பூன்
சீரகத்தூள்: 2 டீஸ்பூன்
பொடித்த வெல்லம்: 2 டீஸ்பூன்
வேகவைத்த பருப்பு தண்ணீர்: 2கப்
புளி கரைசல்: 1 டேபிள்ஸ்பூன்
எறுமிச்சை சாறு: 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்: 3
மிளகாய் தூள்: 1 டீஸ்பூன்
கறுப்பு உப்பு: 2 ஸ்பூன்
பூண்டு : 1 பல்
கிரீம், ஓமப் பொடி,
உப்பு தேவையானஅளவு.
எப்படி செய்வது?
மிக்சியில் புதினா, கொத்தமல்லி, மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பருப்பு தண்ணீர், புளிகரைசல், வெல்லம், உப்பு, எலுமிச்சைசாறு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பிறகு அடுப்பிலிருந்து இறக்கி அதில் அரைத்த புதினா விழுதை சேர்க்கவும். இதனுடன் கறுப்பு உப்பு, சீரகத்தூள் ,மிளகாய்தூள், கரம்மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு கிண்ணத்தில் வேகவைத்த உருளை கிழங்கை நறுக்கி போட்டு அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பூரியை நொறுக்கி போட்டு ரெடி செய்த சூப்பை ஊற்றி மேலே சிறிது கிரீம் மற்றும் ஓமப் பொடி தூவி பரிமாறவும். சூப்பர் பானி பூரி சூப் ரெடி.