என்னென்ன தேவை?
சிறிது கரகரப்பாக அரைத்த கோதுமை மாவு – 2 கப்,
கடலை மாவு – 2 டீஸ்பூன்,
நெய் – 1/2 கப், ஓமம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
சோடா உப்பு – ஒரு சிட்டிகை,
பொரிப்பதற்கு எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, லேசாக வறுத்த கடலை மாவு, உப்பு, நெய், ஓமம் சேர்த்து கலந்து, சிறிது சூடான தண்ணீர், சோடா உப்பு சேர்த்து கெட்டியான
பூரி மாவு பதத்தில் பிசைந்து, ஒரு ஈரத்துணியில் 30 நிமிடம் மூடி வைக்கவும். பின், சிறு எலுமிச்சை அளவு உருண்டை செய்து மத்தியில் கட்டை விரலால்
கொண்டு அழுத்தி பாதுஷா போல், மிதமான சூட்டில் எண்ணெயில் நன்கு வெந்து, பொன்னிறமாக வரும்வரை பொரித்தெடுத்து, அதனை சிறிது உடைத்து நெய் மற்றும் தாலுடன் பரிமாறவும்.