தேவையான பொருட்கள்:8475
பாகற்காய் – 250 கிராம்
தக்காளிப்பழம் – 250 கிராம்
வெங்காயம் – 5
பூண்டு – 10
வெந்தயம் – 2
மிளகாய் வத்தல் – 5
கறிவேப்பிலை – சிறிது
புளி – 25 கிராம்
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
மிளாகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
நீர் – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் பாகற்காயை கழுவி வட்ட வட்டமாக வெட்டவும். தக்காளியையும் கழுவி வெட்டவும். வெங்காயம் பூண்டு, மிளகாய் எல்லாவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை நீரில் கரைத்து அளவாக எடுத்து வைக்கவும். அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து எணணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதங்கி பொன் நிறமாக வரும் போது பூண்டை சிறிது தட்டி அதனுடன் சேர்த்து வெந்தயத்தையும் போட்டு நன்கு கிளறிக் கொண்டே மிளகாய்த் தூள், உப்புதூள், கரைத்த புளி இவற்றையும் சேர்த்து கறியை நன்கு கிளறி மூடி 5 நிமிடம் வேக விடவும். பின்னர் வற்றியதும் நறுக்கிய தாக்காளியையும் சேர்த்து வேக விடவும். பின்னர் ஆறவிட்டு பறிமாறலாம். சாதம், சாப்பாத்தி, தோசை இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.