சிற்றுண்டி வகைகள்

பழநி பஞ்சாமிர்தம்

என்னென்ன தேவை?

வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் – 6,
நறுக்கிய பேரீச்சை – 12-15,
காய்ந்த திராட்சை – தேவைக்கு,
தேன் – 1/2 கப்,
நெய் – 1/2 கப்,
நாட்டுச்சர்க்கரை – 100 கிராம்,
பனங்கற்கண்டு – சிறிது.

எப்படிச் செய்வது?

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நெய், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு போட்டு பிசைந்து பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்குப் படைத்து, பரிமாறவும். குறிப்பு : பழநி முருகனுக்கு பஞ்சாமிர்தம் பிரதான நிவேதனம். வட இந்தியர்கள் 2 வாழைப்பழம், 1 கப் காய்ச்சாத பால், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், காய்ந்த திராட்சை, முந்திரி, நெய், தேன், ஜாதிக்காய் தூள், சிறிது தேங்காய்த் துருவல் எனக் கலந்து தயாரிப்பார்கள்.

Related posts

சூப்பரான டிபன் உருளைக்கிழங்கு மசாலா பூரி

nathan

சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசை

nathan

சிம்பிளான. சீஸ் மக்ரோனி

nathan

கம்பு கொழுக்கட்டை

nathan

போளி

nathan

பேபி கார்ன் ப்ரை

nathan

வெங்காயத்தாள் துவையல்

nathan

டிரை ஃப்ரூட் தோசை

nathan

அவல் ஆப்பம்

nathan