05 1483594031 1 300x225
தலைமுடி சிகிச்சை

பளபளப்பான நீண்ட கூந்தலை பெற இந்த விதையை உபயோகித்திருக்கிறீர்களா?

பளபளப்பான மற்றும் நீண்ட தலைமுடி பற்றிய உங்களுடைய கனவு நனவாக வேண்டுமெனில் இந்த சியா விதைகளை உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்துங்கள்.
சியா விதைப் பூச்சு நம்முடைய தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றது.அடர்த்தியான, பளபளப்பான மற்றும் நீண்ட தலைமுடி பற்றிய உங்களுடைய கனவு நனவாக வேண்டுமெனில் இந்த சியா விதைகளை உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்துங்கள். சியா விதைகளில் சோயா பீன்ஸ்களை விட 20 சதவீதம் அதிக புரதம் உள்ளது. உங்களுடைய கேசம் 70 சதவீதம் கெராட்டீன் என்கிற புரதத்தினால் உருவானது. இந்த கெராட்டீன் உங்களுக்கு நீண்ட, அழகிய மற்றும் பளபளப்பான கூந்தலைத் தருகின்றது. சியா விதைகளில் உள்ள அதிக அளவிலான புரதம் உங்களுடைய சேதமடைந்த முடியை சீர்படுத்தி புதிய மயிர்க்கால்களின் மீளுருவாக்கத்திற்கு உதவுகின்றது. இப்போது நீங்கள் இங்கே சியா விதைப் பூச்சை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் இதன் மூலம் உங்களுடைய உச்சந்தலை மற்றும் தலைமுடியை எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்
05 1483594031 1 300x225
செய்முறை ஒரு கிண்ணத்தில் சுமார் இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை எடுத்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பத்து நிமிடங்களில் சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி உப்பத் தொடங்கும். அப்பொழுது தண்ணீரை வடித்து விடுங்கள். இப்பொழுது உங்களுக்கு ஒரு ஜெல் போன்ற பதத்தில் சியா விதைகள் கிடைக்கும்.
05 1483594039 2 300x225
செய்முறை தேங்காயை அரைத்து அதனுடைய பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய இந்தப் பூச்சிற்கு அரை கப் தேங்காய் பால் தேவைப்படும். தேங்காய் பாலில் நிறைவுறா கொழுப்பு உள்ளது. இது உங்களுடைய சேதமடைந்த கூந்தலை சீர் செய்ய உதவும். மேலும் இது உச்சந் தலைக்கு பாதுகாப்பளிக்கின்றது. மேலும் இது பளபளப்பான கூந்தலை உங்களுக்கு தரும்.
05 1483594046 3 300x225
செய்முறை தேங்காய் பாலுடன் ஒரு தேக்கரண்டி எழுமிச்சை சாறு சேருங்கள். அதனுடன் ஜெல் பதத்தில் உள்ள சியா விதைகளை சேருங்கள். இந்தக் கலவை நன்கு கலக்கவும். எழுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் உங்களுடைய உச்சந் தலையை சுத்தப்படுத்தி, பொடுகை போக்கி எண்ணெய் வழிவதை தடுக்கின்றது.
05 1483594053 4 300x225
செய்முறை இந்தக் கலவையின் நெடியை உங்களால் நுகர முடியவில்லை எனில், வாசனைக்காக சில் துளிகள் லாவண்டர் எண்ணெயை சேருங்கள். உங்களுக்கு தேவையான அளவு மற்றும் பதத்திற்கு வரும் வரை எண்ணெயை சேர்த்து அதன் பின்னர் கலவையை நன்கு கலக்குங்கள்.
05 1483594060 5 300x225
செய்முறை தலை முடியை நன்கு சீவி அதில் உள்ள சிக்கல்களை நீக்குங்கள். தலையை வாரும் முன்னர் ஒரு சில துளிகள் தேங்காய் எண்ணெயை உங்களுடைய தலைமுடியில் தடவுங்கள். இவ்வாறு செய்வது உங்களுடைய முடிக்கு வளவளப்பை தரும் மற்றும் சிக்கல்களை எளிதாக நீக்க உதவும்.
05 1483594067 6 300x225
செய்முறை உங்களுடைய தலை முடியை சிறிய பிரிவுகளாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள் அதன் பின்னர் ஒரு தூரிகையை பயன்படுத்தி சியா விதை கலவையை உங்களுடைய தலைமுடியில் தடவுங்கள். கலவையை தடவும் பொழுது முடியின் வேரிலிருந்து நுனி வரை மிகவும் கவனமாக தடவுங்கள். மிகவும் கவனமாக உங்களுடைய தலைமுடி முழுவதும் பரவும் படி இந்தக் கலவையை தடவும். அதிகமாகத் தடவினால் கலவை உங்களுடைய முகத்தில் வழிந்து விடும். எனவே நீங்கள் மிகவும் கவனமக இருக்க வேண்டும்.
05 1483594078 7 300x225
செய்முறை ஒது துண்டை எடுத்து கொதிநீரில் முக்கி எடுங்கள். அதை நன்கு பிழிந்து அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றவும். இப்பொழுது இந்த துண்டை உங்களுடைய தலை முடியைச் சுற்றி கட்டவும். இவ்வாறு செய்வதன் மூலம் துண்டில் இருந்து வெளிவரும் நீராவி, தலைமுடியில் உள்ள சியா விதை பூச்சு உங்களுடைய தலைமுடியில் நன்கு ஆழமாக ஊடுறவ உதவும்.
05 1483594084 8 300x225
செய்முறை இந்த பூச்சை சுமார் 10 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள். அதன் பின்னர் உங்களுடைய தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு நன்கு அலசி எடுங்கள். கண்டிஷனர் உபயோகிப்பதை தவிர்க்க முயலுங்கள். இந்த சியா விதை பூச்சு உங்களின் கேசத்திற்கு கண்டிஷனராக செயல்பட்டு, பளபளப்பான கூந்தலை தரும். எனவே அதிகப்படியான கண்டிஷனர் உங்களுடைய கூந்தலை பாழாக்கி விடும்.
05 1483594091 hairgrowth 300x225
செய்முறை குளித்து முடித்த பின்னர் உங்களுடைய கேசத்தில் இருந்து அதிகப்படியான தண்ணீரை துவட்டி எடுத்து விடுங்கள். தலையை துவட்ட மிகவும் மெல்லிய பருத்தி துண்டை பயன்படுத்துங்கள். தலை துவட்டும் பொழுது உச்சந் தலையை கடுமையாக தேய்க்காதீர்கள். அதிகப்படியான ஈரம் உங்களுடைய தலைமுடியை கண்டிப்பாக பாதிக்கும்.

Related posts

அடர்த்தியான, நீளமான முடியை பெற என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது!

nathan

தலைமுடியை பாதுகாக்கும் செம்பருத்தி

nathan

ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

nathan

வெள்ளை முடி அதிகமா இருக்கா?

nathan

வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

nathan

பொடுகால் அவதியா! அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…மழைக் காலத்தில் சருமத்தையும், கேசத்தையும் பாதுகாப்பது எப்படி?

nathan

இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்..

nathan

பொடுகு என்றால் என்ன? எதனால் வருகிறது?

nathan