பருக்கள் மறைவதற்கு ஆரஞ்சுச்சாறுடன் கொத்தமல்லி இலைச்சாறும் முல்தானிமட்டியும் கலந்து தடவலாம். சாதம் வடித்த கஞ்சியும், வெந்தயமும் கூந்தலுக்கு நல்ல கண்டிஷனர் தரும்.
பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெயுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின் குளித்து வந்தால் தோல் மென்மை பளபளப்பு கூடும்.
கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.வெதுவெதுப்பான பாலில் நனைத்த காட்டன் துணியை கண்களில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் போகும்.
பருக்கள் மறைவதற்கு ஆரஞ்சுச்சாறுடன் கொத்தமல்லி இலைச்சாறும் முல்தானிமட்டியும் கலந்து தடவலாம்.