அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும் அதிக வேலைப் பளு, தூக்கமின்மை, டென்சன், சரியான சரும பராமரிப்பு இல்லாமை போன்றவற்றின் காரணமாக, அழகாக இருக்க முடியவில்லை. அதிலும் மற்ற நேரங்களில் அழகாக காணப்பட்டாலும், ஏதேனும் விழாக்கள் என்றால் அப்போது தான் முகம் பொலிவின்றி காணப்படும். அந்த நேரத்தில் அழகு நிலையங்களுக்குச் சென்று பராமரிக்க முடியாது. ஆனால் வீட்டில் இருக்கும் சிறிய அழகு நிலையமாக இருக்கும், சமையலறையிலேயே சருமத்தை அழகாக்க முடியும்.
ஃபேஸ் பேக்
வீட்டில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழங்கள் இருந்தால், அதன் துண்டுகளை தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவினால், பொலிவிழந்து காணப்பட்ட முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.
முகப்பரு தொல்லை
பொதுவாக முகத்தை அழகின்றி வெளிப்படுத்துவதற்கு முகப்பருவும் ஒரு காரணம். அத்தகைய முகப்பருவை உடனே போக்குவதற்கு, சந்தனப் பவுடர் அல்லது டூத் பேஸ்ட்டை பருக்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து கழுவினால், நன்கு வெளிப்பட்ட பருக்கள் மறைந்து லேசாக காணப்படும்.
ஷேவிங்
ஆண்கள் நன்கு அழகாக ஒரு ஹேண்ட்சம் பாய் போன்று காணப்படுவதற்கு, தாடி மற்றும் மீசையை ட்ரிம் செய்து கொள்ளலாம் அல்லது பிரெஞ்ச் கட் செய்து கொள்ளலாம். இதனால் ஒரு வித்தியாசமான லுக்கில் அழகாக காணப்படலாம்.
ஸ்கரப்
ஆப்ரிக்காட், வால் நட் அல்லது பாதாம் போன்றவற்றை கொண்டு முகத்திற்கு ஸ்கரப் செய்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமம் ஜொலிக்கும்.
வாசனை திரவியங்கள்
அழகு ஜொலிப்பதில் மட்டுமில்லை. உடலில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க வேண்டும். எனவே எங்காவது செல்லும் போது அக்குளில் ஷேவிங் அல்லது வேக்ஸ் செய்து கொண்டு, வாசனை திரவியங்களை அடித்துக் கொள்ள வேண்டும்.
பிரஷ்
வாய்களில் இருந்து துர்நாற்றம் வராமல் இருப்பதற்கு, வெளியே செல்லும் முன், பிரஷ் செய்து விட்டோ அல்லது மௌத் வாஷ் பயன்படுத்தி வாயை கொப்பளித்தோ செல்ல வேண்டும்.
ப்ளீச்
ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக காணப்படும்.
பழுப்பு நிற சருமம்
பழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.
நகங்கள்
நிறைய பேர் நகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் எங்கேனும் செல்லும் போது அழுக்கு நகத்துடன் சென்றால், அழகாகவா இருக்கும். எனவே அடிக்கடி நகங்களை வெட்டிவிட வேண்டும்.
மேக்-கப்
எப்போதும் அதிக மேக்-கப் போடாமல், அளவாக போட்டாலே முகம் நன்கு அழகாக காணப்படும். அதிலும் முகத்திற்கு ரோஸ் பவுடர், லிப்ஸ்டிக் மற்றும் மஸ்காரா போட்டாலே, அழகான தோற்றம் கிடைக்கும்.
ஆடை மற்றும் அணிகலன்
ஆடைகள் அணியும் போது, பெரிய விழா என்பதால், அணிகலன்கள் அதிகம் உள்ளது என்று, ஆடைக்கு ஏற்ற அணிகலன்களை அணியாமல், அளவுக்கு அதிகமாக அணிந்தால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே உடைக்கு ஏற்ற ஆபரணங்களை அணிய வேண்டும்.
புருவங்கள்
புருவங்களை அவ்வப்போது ட்ரிம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ட்ரிம் செய்ய தெரியுமெனில் செய்து கொள்ளலாம். ஆனால் நாமாக செய்வதை விட, அழகு நிலையங்களில் செய்தால் தான் நன்றாக இருக்கும். இல்லையெனில் தாமாக செய்யும் போது, சிறு தவறு ஏற்பட்டாலும் பின் முக அழகே கெட்டதாகிவிடும். எனவே அவ்வப்போது புருவத்தை சரியாக பராமரிக்க வேண்டும்.
ஹேர் ஸ்டைல்
இடத்திற்கு தகுந்தவாறு ஹேர் ஸ்டைல்களை பின்பற்ற வேண்டும். மேலும் முக பாவனைக்கு ஏற்றவாறும் ஹேர் ஸ்டைல்களை பராமரித்து வந்தால், அவசரமாக எங்கேனும் வெளியே செல்லும் போது, அழகான ஹேர் ஸ்டைல்களை மேற்கொள்ள முடியும்.
மாய்ச்சுரைசர்
உடலில் வறட்சி இல்லாமல் காணப்படுவதற்கு அதிக எண்ணெய் பசையில்லாத மாய்ச்சுரைசரை போட வேண்டும். இதனால் சருமம் ஈரப்பசையுடன் இருப்பதோடு, புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் காணப்படும்.