தேவையான பொருட்கள்:
பட்டர் பீன்ஸ் – ஒரு கப்,
தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* பட்டர் பீன்லை சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
* தனியா, மிளகாய், அரை டீஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பை சிறிது எண்ணெய் விட்டு லேசாக வறுத்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, மீதி உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து வேக வைத்த பட்டர் பீன்ஸ், பொடித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது உப்பு போட்டுக் கிளறவும்.
* கடைசியில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவலைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
* சுவையான சத்தான பட்டர் பீன்ஸ் சுண்டல் ரெடி.